புதன், 24 ஏப்ரல், 2013

மற்றவர் மீதான மனக் கசப்பு அகன்று போக காத்திருங்கள்!


யார் மீதும் மனக்கசப்பு, வைராக்கியம், விரோதம் வைக்கக்கூடாது (யாக்.3:14). அப்படி ஏதாவது பாவம், இருதயத்தில் இருக்கும் பட்சதில் அவர்களுக்கு சொர்கத்தில் இடமில்லை. நடைமுறை வாழ்க்கையில் யாருடனும் உரசல் இல்லாமல் வாழ முடியாது. அலுவலகம், வெளியிடங்களில் மற்றவருடன் எதிர்பாராமல் சண்டை, வாக்குவாதம் வரக்கூடும். பிறவக்குணம் என்று கூறப்படும் ஜென்ம சுபாவங்கள் நீங்கப் பெற்றவனே இந்த சந்தர்ப்பங்களிலும் பாவம் செய்யாமல் தப்புவான்.

யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்படும் போது எதிராளி செய்யும் தவறுகளை மனதில் வைத்துக் கொள்கிறோம். அந்தத் தவறுகளை மன்னிக்காமல் இருப்பதால் அவருக்கு எதிரான கசப்பும், விரோதமும், வைராக்கியமும் ஏற்பட்டுவிடுகிறது. இது நாளடைவில் வளர்ந்து வளர்ந்து, அந்த நபரை முற்றிலும் வெறுக்கக் கூடிய நிலைக்கு கொண்டு செல்கிறது. அப்படிப்பட்ட இருதயத்தை இறைவன் விரும்பவில்லை. அவை நீக்கப்பட்டு, இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம் (எபே.4:31).

செத்த பிராணிகள் அகற்றப்படாமல் கிடந்தால், அந்த இடத்தை சுற்றி துர்நாற்றம் வீசும். பிணம் நாறுவது மட்டுமல்ல, அதை சுற்றி இருக்கும் இடத்தையும் அந்தப் பிணம் நாறச் செய்யும். அதுபோல் தான் இருதயத்திலும் இருக்கிற கெட்ட குணங்களும் அவனை அப்படியே செய்யும். யார் மீது பகை வைத்து இருக்கிறோமோ அவரைப் பற்றி வேறொருவருடன் பேசும் போது எரிச்சலான கெட்டவார்த்தைகள், கோபமான சிந்தனைகள் போன்ற நாற்றமெடுக்கும் தன்மைகள்தான் வெளிப்படும். அவரைப் பற்றி சிந்தனைசெய்யும்போதும் கெட்ட சிந்தனைகள் தான் நிழலிடும். இயேசுவுக்கு எதிராக எத்தனையோ பேர் செயல்பட்டபோதும் கூட, தனது இருதயத்தில் அவர்களைப் பற்றி இப்படிப்பட்ட தன்மையை ஓருநாளும் அவர் வைத்திருந்ததில்லை.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், அவர்கள் இருதயத்தில் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு கசப்பை ஏற்படுத்திவிடும் (கொலோ.3:19). இது காலகாலமாக அப்படியே இருந்து வைராக்கியமாக மாறிவிடும். இவர்களுள் ஒருவர் எதைச் செய்யதாலும் அது மற்றவருக்கு குற்றமாகவே தோன்றும். அதனால் எப்போதும் சண்டையும் சச்சரவுமே அந்த வீட்டில் நிலையாக இருந்துவிடும். பின்னர் பிரிவு வரை செல்ல வைத்துவிடும். மனக்கசப்பையும் அதன் தொடர்ச்சியாக சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்துவது சாத்தானின் செயலே. இதற்கு நீங்கலானவர் எவரும் இல்லை.

அப்படியானால் இந்தப் பாவத்துக்கு நீங்கலாக இருப்பது எப்படி? யாரைப் பற்றியாவது மனக்கசப்பு வரும்போது  அதை நாம் என்றைக்காவது இயேசுவிடம் கூறி இருக்கிறோமா? மற்றவர்களுக்குத் தெரியாத அந்தக்கசப்பை இறைவன் அறிவார். அவர் இருதயத்தைப் பார்க்கிறவர் என்பதால், அதை நாம் மறைக்க முடியாது. மற்றவர்கள் மீதான கசப்பை ஒரு பாவமாக நாம் எண்ணாமல், இறைவனிடம் அதைப்பற்றி கூறாமலேயே விட்டுவடுகிறோம். அதுவே மிகப் பெரிய சண்டைகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது.

எனவே நமது இருதயத்தை நாம் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது. ஆனால், ‘கசப்பு ஏதும் இல்லை’ என்று நமது இருதயமே நம்மிடம் பொய் சொல்லக் கூடும். நம்மால் நம்மை முழுமையாக அறியமுடியாது. நமக்கு சரி என்று தோன்றும் விசயங்கள் நடைமுறையில் தவறாக நடக்கவும் வாய்ப்புவுள்ளது. எனவே கசப்பை நீக்குவதற்கு இறைவனிடம் முழுமனதோடு கேளுங்கள். உரியகாலத்தில் அதுநீக்கப்படும். அதன் பிறகே இருதயம் குணப்படும். கசப்பு நீங்கும்வரைக் காத்திருங்கள். இப்படி ஒவ்வொரு பாவத்தையும் இருதயத்தில் இருந்து நீக்கிவிட்டால் ஆன்மிக வாழ்வு வெற்றியாக அமையும். மனிதன் இந்த ‘பூ’ உலகத்திலேயே இறைவனின் அருள் பெற்றவனாக இருக்கலாம் அதுவே சந்தோஷம்.

நன்றி – மனிதனின் அடையாளம்

ஒருவன் மனிதன் என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அவை அன்பு, பண்பு, பகுத்தறிவு, நேர்மை, உண்மை, நன்றி.

மனிதனுக்கு முதல் அடையாளம் பகுத்தறிவு, இரண்டாவது அடையாளம் நன்றி. இந்த இரண்டு அடையாளங்களும் இல்லாவிட்டால் மனிதத்தன்மை நிறைவுபெறாது.

மனிதனுக்கும் மிருகத்துக்கும் ஐந்து அறிவு உண்டு. படைப்புகளில் மனிதன் உயர்ந்தவன் என்பதால் அவனுக்கு அதிகபட்சம் கூடுதலாக ஒரு அறிவு வழங்கப் பட்டிருக்கிறது. அதுதான் பகுத்தறிவு.

மிருகத்துக்குப் பகுத்திறிவு இல்லை. அதனால் அதற்கு நல்லது கெட்டது தெரியாது. மனிதன் அப்படி அல்ல. அவனுக்குப் பகுத்தறிவு உண்டு. அதனால்தான் அவன் நல்லது கெட்டதை அறிகிறான். இந்த ஆற்றலை இறைவன் மனிதனுக்கு அருட்கொடையாக கொடுத்து இருக்கிறான். அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்! நன்றி செலுத்துகிறோமா?

உலகெங்கும் இந்தக் கேள்விக்குப் பதில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. மனிதனுக்கு முழுஉருவம் கொடுத்து அவனை மனிதன் என்று உலகுக்கு அறிமுகம் செய்துவிட்டான் படைத்தவன். அவன் அந்த உயர் படைப்பபை தக்கவைத்துக்கொள்ள அவனுக்குப் பகுத்தறிவையும் அளித்துள்ளான்.

உலகில் எல்லா மனிதர்களும் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறார்களா? கேள்விக்குறியைக் கண்டுபிடித்த மேதைக்கு நன்றி!
உலக வாழ்வில் கேள்விக்குறிகள் இருவகைப்படும்.
மனிதனை நோக்கி  கேள்விக்குறி போனால் அவன் மனிதன் அல்ல. அவனிடமிருந்து கேள்விக்குறி போனால் அவன் மனிதன்.

ஒரு மனிதனை மனிதன் என்று சொல்ல அவனுடைய பகுத்தறிவுதான் காரணம்.
மனிதன் பகுத்தறிவை எப்படி வளர்த்துக்கொள்கிறான்? கேள்வி ஞான வழி. இதுதான் நிதர்சனமான உண்மை.

மனிதனைப் படைத்து அவனுக்குத் தேவையானவற்றை எல்லாம் படைத்து இருக்கிறான். அப்படிப்பட்ட இறைவனுக்கு மனிதன் நன்றி செலுத்துகிறானா?

செலுத்தினால் அவன் மனிதன். இல்லாவிட்டால் அவன் மனிதனே அல்ல.
மனித அடையாளங்களில் முதன்மையானது நன்றி. படைத்த இறைவனை வணங்குவது முதல் நன்றி. ஒருவன் செய்த உதவிக்கி பதில் உதவி செய்வது இரண்டாவது நன்றி!
இந்த இரண்டு நன்றிகளையும் யார் செய்கிறார்கள் என்றால் ‘நல்ல உள்ளம்’ படைத்தவர்கள்.

‘செடிகள், (கொடிகள்) மரங்கள் (முதலிய யாவும்) இறைவனுக்கு வழிப்பட்டு சிரம் பணிகின்றன’ (55:6) திருக்குர்ஆன்  கூறும் இந்த வசனம், ‘எங்களைப் படைத்து. எங்களுக்கு மழையை இறக்குகிற இறைவனுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்’  என்று மனிதனுக்குப் பாடம் சொல்லித்தருகிறது.
இறைவனுக்கு நன்றி செலுத்தி நம் வாழ்க்கையை நன்றியால் நிரப்பி மனிதனாக வாழ்வோமாக!

உங்கள் செயல்கள் நன்மையில் முடிய வேண்டுமா...?

இரண்டு தணிநபர்கள் கோபம் கொள்ளும்போது  அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு அடித்துக்கொள்வார்கள். இரு சமுதாயத் தலைவர்கள் கோபம் கொண்டால் இரு சமுதாயமும் மோதிக்கொள்ளும். இருநாட்டுத்தலைவர்கள் கோபம் கொண்டால் அது போரில் கொண்டுபோய் முடியும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் கோபம் என்ற நெருப்பை தண்ணீர் என்ற பொறுமையின் மூலம் அணைக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தனி நபரில்லிருந்து தொடங்கி உலகம் முழுவதும் அமைதிப்பூங்காவாய் காட்சி அளிக்கும்.

இதைத்தான் திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது. பொறுமையின் சிறப்பையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி பல இடங்களில் திருமறையில் வரும் சிறப்பு மிக்க அந்த வசனங்களில் சில...
நம்பிக்கை கொண்டாரே, பொறுமையை கைக்கொள்ளுங்கள். பொறுமையில் மற்றவரை மிகைத்து விடுங்கள். உறுதியாக நில்லுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். வெற்றி பெறுவீர்கள். (திருக்குர் ஆன் 3:200).

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (திருக்குர் ஆன்: 2:45).

ஒரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களை சேதப்படுத்தியும் உங்களை சோதிப்போம். பொறுமையை கைக்கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக. (திருக்குர்ஆன்: 2:15).

அச்சம், பசி, இறப்பு, இழப்பு ஆகியவை ஏற்படும் போது பதற்றம் வரும், பொறுமையின் மூலம் இதை தடுத்துவிட்டால், அதன் பிறகு நிறைய நன்மைகள் நம்மை வந்து சேரும். இதைத்தான் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் நமக்கு சொல்லிக்காட்டுகிறது.
நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே, உங்கள் இறைவனை அஞ்சுங்கள். இவ்வுளகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாவின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன்) கூறுவதை தெரிவிப்பீராக. (திருக்குர்ஆன்.39:10).

நம்பிக்கை கொண்டோரே பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (திருக்குர்ஆன்.2:153)

இவ்வாறு பொறுமையை வலியுறுத்தும் வசனங்கள் திருக்குர்ஆனில் நிரம்பிக்கிடக்கின்றன.

இறை நம்பிக்கையாளனுக்கு நடக்கும் எல்லா செயல்களும் நன்மையில்தான் முடிகின்றன. இந்த பாக்கியம் இறை நம்பிக்கையாளர்களுக்கு தவிர மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு இறை நம்பிக்கையாளன் மகிழ்ச்சி அடைந்தால் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அது  அவனுக்கு கூடுதல் நன்மையாகவும் ஆகிவிடுகிறது. ஒரு துன்பம் அவனை நெருங்கும்போது பொறுமையைக் கைக்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே மாறிவிடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உனக்குள் ஓர் உன்மை


யாரோ தின்று முடித்து வீசி எறிந்த மாங்கொட்டையில் இருந்து ஒரு மாபெரும் விருட்சம் எழுகிறது. காக்கையின் எச்சத்தில் உள்ள சிறு விதையில் இருந்து ஒரு புதிய வேப்ப மரத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது.

வானமழையில் ஏதோ ஒரு துளி, தான் விழுவது எங்கென்று தனக்கே தெரியாமல் சிப்பிக்குள் விழுந்து முத்தாய் விளைகிறது.

வாசற்படியாகப் போகிறதோ? தெய்வச்சிலாயாகப் போகிறதோ?. இது எந்தக்கல்லுக்குதான் முன்கூட்டியே தெரியும்.

டிக்கெட் வாங்காமல் ரெயில் ஏறி பட்டணத்திற்கு வந்தவன், பின்னாளில் தேர்தலில் நிற்பதற்கான டிக்கெட் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விடுகிறான். ஊரைவிட்டு விரட்டப்பட்டவன், மேள வாத்தியங்களுடன் மாலை மரியாதையோடு பின்னாளில் வரவேற்கப்படுகிறான்.

இவையெல்லாம் எப்படி? எது எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், அதிர்ஷ்டம் கூட தகுதியின் அடிப்படையில் தான் கிட்டுகிறது. அதிர்ஷ்டம் என்பதை வாய்ப்பு என்றும் சொல்லலாம்.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் உழைப்பு முன்னேற்றத்திற்கான நடைமுறையாக இருக்கிறது. அதிர்ஷ்டம் வெறும் கற்பனையாக இருக்கிறது.

யார் என்ன சொன்னால் என்ன? எந்தச் சூழ்நிலை வந்தால் என்ன? நீங்கள் நீங்களாக இருங்கள். உங்களுக்குரிய வாய்ப்புகள், உங்களுக்குரிய எதிர்காலம் உங்களைத் தேடி வராமலா போய்விடும்.

நெப்போலியன் குடுப்பத்தில் வறுமைதான். குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லாத நிலை. மற்ற மாணவர்கள் அவனைப்பார்த்துக் கிண்டல் செய்வார்களாம். அப்போது தெல்லாம் நெப்போலியன் தனது புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கிவிவானாம்.

காலம் மாறியது. ஏளம் செய்த மாணவர்கள் வியக்கும் அளவிற்கு அறிவில் சிறந்தான். ஆற்றலில் சிறந்தான். பின்னர் உலகமே புகழும் மாவீரனாகத் திகழ்ந்தான் என்பது வரலாறு.

நெப்போலியன் தனக்குள் இருந்த தன்னை- அந்த உண்மையைக் கண்டு கொண்டான். வரலாற்றில் இடம் பிடித்தான்.

பீத்தோவன் என்றால் யாரென்று உலகம் நன்கறியும். மாபெரும் இசைமேதை. அவர் செவிடாகவும் துக்கத்தில் ஆழ்ந்தவராகவும் இருந்தபோது தான் தனது மிகச்சிறந்த இசைப்படைப்புகளை உருவாக்கினார்.

அந்த மாமேதை தனக்குள் தான் யாரென்பதைக் கண்டுக் கொண்டார். அந்த உண்மையை இசை வடிவங்களாய் வார்த்துக் கொடுத்தார்.

நம்மைப்பற்றி உலகம் என்ன நினைக்கிறது, என்ன சொல்கிறது என்பது விஷயமல்ல. நம்மைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோம், நம்மைப்பற்றி நம்முடைய உன்மையான மதிப்பீடு என்ன என்பதுதான் முக்கியம்.

ஹென்றிச் ஹீன், சென்ற ஙூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானியப் புரட்சிக் கவிஞன், ‘I am the Sword: I am the flam’ என்று பாடினார்.

அவர் தனது மரணத்திற்கு முன்னால் இப்படி எழுதி வைத்துச் சென்றார்.

‘நான் இறந்தபின், என் சமாதியின் மீது மலர்களை வைக்காதீர்கள்; மாறாக ஒரு வாளை நட்டு வையுங்கள். ஏனெனில், நான் எப்போதும் மனித குலத்தின் விடுதலைக்குப் போராடிய போராளியாகவே இருந்தேன்’.

அந்தக் கவிஞன் தன்னைத் தெரிந்திருந்தான். அதனால்தான், தான் யாரென்பதை உலகிற்கு அவனால் சொல்ல முடிந்தது. நம்மை நாம் அறியாவிட்டால் உலகம் நம்மை அறிய முடியாது.

கிரிக்கெட் மட்டையைக் தூக்கிக்கொண்டு ஆக்கி விளையாடச் செல்பவன் இரண்டிலும்  தேறாதவன். நிலத்தின் தன்மையறிந்து விதைக்காதவன் வாழத்தெரியாதவன்.

உண்மையை நாம் எப்பேது உணர்ந்து கொள்கிறோமோ அப்போதுதான் நாம் வாழ்வைத் தெரிந்து கொள்கிறோம். உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசம் காணத் தெரியாமல் இருக்கும்வரை, வாழ்க்கை வெறும் மாயையாகவே தோன்றுகிறது.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த காலம் அது. நாடகம் காண வரும் ரசிகர்களைப் பற்றிய ஒரு செய்தி அது. அதாவது ‘ரோமியோ அன்ட் ஜூலியட்’ , ‘ஹாம்லெட்’ , ‘மாக்பெத்’ ஆகிய நாடகங்களைப் பார்த்துவிட்டு சீமான்களும் சீமாட்டிகளும் கண்களைக் கசக்கிக் கொண்டு வெளியே வருவார்களாம். அரங்கத்திற்கு வெளியில் கடுங்குளிரில் நடுங்கியபடி அவர்களுக்காகக் காத்துக்கிடக்கும் சாரட் ஓட்டிகளைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டார்களாம்.

இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். வால் போஸ்டர்களைப் பார்த்துக் கும்பிட்டு நிற்பார்கள். ‘கட்அவுட்’ களுக்கு அபிஷேகம் செய்வார்கள். ஆனால் அவர்கள் தங்களைப்பற்றித் துளியளவும் சிந்தனை இல்லாதவர்கள். தங்களை யாரென்று அறிந்து கொள்ளதவர்கள்.

தன்னைத்தானே எவன் அறிந்து கொள்கிறானோ, அவன் தனக்குள் உன்மையின்  ஒளியைக் காண்கிறான். அவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சிறுவயதிலேயே அபாரமான அறிவுக்கூர்மை, அற்புதமான நினைவாற்றல். அவரது தந்தை அவரை தமது மடிமீது அமர்த்திக்கொண்டு, தமது மன்னோர்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிடுவார்.

அவை அனைத்தும் மிக நீளமான பெயர்கள். எனினும், ராமகிருஷ்ணர் அவைகளை ஒருமுறை கேட்டதும் நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்வார். தப்பேதும் இல்லாமல் அப்படியே திரும்பச் சொல்வார்.

தோத்திரப்பாடல்கள், ராமாயண, மகாபாரதக் கதைகள் என்று ராமகிருஷ்ணருக்கு அவரது தந்தை தினந்தோறும் கூறுவார். அவற்றை கேட்டபடியே கூறும் ஆற்றல் மிகச்சிறுவயதிலேயே ராமகிருஷ்ணரிடம் இருந்தது.

ஆனால் அவருக்கு கணிதமோ காத தூரம். அவரது தந்தை எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. ஆர்வமும் இயல்பான விருப்பமும் இல்லாததால், கணிதத்தை நினைவு வைத்துக்கொள்ள ராமகிருஷ்ணர் விரும்பவில்லை. நியாயம் தானே.

உங்கள் மனதிற்கு ஒவ்வாத ஒன்றை உங்கள் மீது திணிப்பதற்கு யாரையும் அனுமதிக்காதீர்கள். நிழலுக்கு ஒதுங்கியவன் விரும்புகிறான் என்பதற்காக புளியமரம் பப்பாளிப் பழங்களைத் தரமுடியாது.

உங்களுக்குள் ஓர் ‘உண்மை’ இருக்கிறது. அந்த ‘உண்மை’ தான் நீங்கள். அதை நீங்கள் உணர்ந்து கொண்டுவிட்டால், அதன்பின் குழப்பத்திற்கு வழியே இல்லை.

அறிவியல் பாடத்தில் வெறும் முப்பத்தைந்து மதிப்பெண்களை எடுத்தவன், மருத்துவக் கல்லூரியை நினைக்கூடாது. யாரும் அவனை நிர்பந்திக்கவும் கூடாது. ஏனெனில், அது ஆபத்தான விஷயம்.

அறிவியல் தான் வாழ்க்கை என்றில்லை. கலை, இலக்கியம், சட்டம், கணினி, தகவல் தொழில்ஙுட்பம் என எத்தனையோ துறைகள் உள்ளன. எந்தத்துறையில் சாதிக்க முடியுமோ, அந்ததுறையில் ஙுழைவதுதான் வெற்றிக்கு வழி.

சிலர் எதைஎதையோ நினைக்கிறார்கள். எப்படிஎப்படியோ கணக்குப்போடுகிறார்கள். தப்புத்தப்பாய் முடிக்கிறார்கள்.

அங்குமிங்கும் அலைவது முக்கியமல்ல. உங்கள் நிலை என்ன என்பது தான் முக்கியம். அதில் நீங்கள் தெளிவுடன் இருந்தால், வெற்றி உங்களுக்குள்  இருந்து துளிர்விடும்.

ரஷிய நாட்டு மனிதன் ஒருவன் விண்வெளியை அடைந்தான். அப்போது குருஸ்ரஷேவ், ‘என் நாட்டு மனிதன் சந்திரனை வட்டமிட்டுவிட்டான். அங்கு எந்த சொர்க்கத்தையும் அவன் காணவில்லை’ என்று வானொலியில் சொன்னார்.

உண்மைதான். மேலே எங்கும் சொர்க்கம் இல்லை. கிழே எங்கும் நரகம் இல்லை. அவை இருவேறு நிலைகள். உங்கள் மனத்தின் வழி வாழ்வின் நிலையே சொர்க்கம் அல்லது நரகம்.

எனவே உங்களுக்குச் சம்பந்தமில்லாதவைகளில் மூக்கை ஙுழைத்து, வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளாற்றலை உணர்ந்து. அந்த ஆற்றலை வளப்படுத்திப் பாருங்கள். நீங்கள் பேசப்படுவீர்கள்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு ஐந்து வயது நிரம்பியது. தமிழ் கற்க அவரைத் தன் குருவிடம் சேர்த்தார் அவரது சகோதரர். ஆனால் ராமலிங்கமோ கல்வி கற்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு கந்தசாமி கோவிலுக்குச்செல்ல ஆரம்பித்தார். அங்கு நீண்ட நேரம் மெய்மறந்து தியான நிலையில் நிற்பாராம்.

ஏட்டுக் கல்வியின் மீது அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. ஆனால் மிக இளம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். தமது ஒன்பதாவது வயதில், ‘ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கன்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்று அவர் எழுதிய பாடல் இன்றுவரை அனைவராலும் விரும்பிப்பாடப்பட்டு வருகிறது.

தன்னைத்தான் உணர்ந்து கொள்ளாதவன் தலைநிமிர்ந்து வாழமுடியாது. தன் ஆற்றலை தன் அடையாளமாக்கிக் கொண்டவனின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. உனக்குள் ஓர் ‘உண்மை’ இருக்கிறது. அந்த ‘உண்மை’ தான் நீ.

நண்பனே,
நீ வீசி எறியப்பட்டாலும்.,
விழுந்த இடத்தில் இருந்து
விருட்சமாய் எழுந்துகாட்டு.

துவாரகை தரிசனம்

ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் நூறு வருடங்கள் வாழ்ந்தார்.

அவர் துவாரகையில் இருந்தபோது எட்டு பேரைத் தமது பட்டத்தரசிகளாக ஏற்று மணந்து கொண்டார்.

ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, நக்னஜீவி, சத்யா, பத்ரா, காலிந்தி, லஷ்மணா ஆகியவர்களே அவரது அந்தப் பட்டத்து ராணிகள்.

துவாரகையில் அவர் தமக்குப் பொன்னாலான ஓர் அரண்மனையை அமைத்துக் கொண்டே தோடு, தமது ராஜ்யத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

ஒரு நூலுக்கு 999 புடைவைகள் வீதம் வழங்கி திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றியதும் ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் இருந்த போதுதான் நடைப்பெற்றது.

துவாரகையில் இருக்கும்போதுதான் அவர் சுதாமா என்ற குசேலரின் வறுமைப் பிணியையும் நீக்கினார்.

குசேலருடைய ஊர் போர்பந்தர் – மகாத்தமா காந்தி பிறந்த ஊர்.

போர்பந்தருக்கு  சுதாமாபுரி என்ற பெயரும் உண்டு.

கடைசியாக அவர் குருஷேத்திரப் போரில் அர்ஜூனனுக்கு கீதையை அருளினார்.

துவாரகை ராஜ்யத்தில் யாருக்கு என்ன துயர் ஏற்பட்டாலும் ஸ்ரீ கிருஷ்ணர் விரைந்து சென்று துன்பம் களைத்து. மக்கள் போற்றி வணங்கும் மன்னனாகச் செயல்பட்டார்  என்பதற்கு ஆதாரமாகப் பல கதைகள் சொல்கிறார்கள்.

ஸ்தூலமாக அவர் உலகில் வாழ்ந்தபோது செய்ததைக் காட்டிலும், மறைந்த பிறகும் தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அவர் அருள் புரிந்து வருவதை மகான்களும், பக்கதர்களும் புனித நினைவுகளாகப் போற்றி வருகிறார்கள்.

பாரதப் போர் முடிந்த பிறகு, தூர்வாசரின் சாபத்திற்கிணங்க யாதவ வம்சத்தின் அழிவுக்கும் அவரே வழி வகுத்தார். பதவியும், பணமும், ஆதிக்கமும் போதையேற்ற யாதவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு மாண்டொழிந்தனர்.

கொளரவர்களைப் பறி கொடுத்த காந்தாரியின் சாபத்தின்படி தானும் மரணம் ஏற்கத் துணிந்தார்.

இந்தச் செய்திகளெல்லாம் அவர் சமுதாய நலனை எவ்விதம் பாதுகாத்தார், சமுதாயப் போக்கைக் கணிப்பதில் எவ்வளவு வல்லவராக விளங்கினார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. அந்த உத்தமருடைய ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து அனுபவித்து ஆராயும்போது நாம் இந்த முடிவுக்குதான் வர முடியும்.

அநார்த்தம் என்ற மாநிலத்தில் துவாரகா இருந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த அநார்த்தம்தான் பின்னால் சொளராஷ்டிரம் என்று பெயர் பெற்றது.

ஹரி வம்சம் துவாரகாவைப் பற்றி ஏராளமான விவரங்களை நமக்கு தருகிறது.

முதுராவிலிருந்து அநார்த்தம் வந்து சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் கருடனிடம் தாம் தங்குவதற்கு ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தரும்படி கேட்டார்.

தன் சிறகுகளை அகல விரித்துப் பறந்த கருடன் கடைசியில் குசஸ்தலி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தார். கண்ணனும் கருடனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் குசஸ்தலி அளவில் சிறிய பரப்பாக இருந்தது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் சமுத்திர ராஜனை வேண்ட, அவனும் கடலை ஒதுக்கி மேலும் 12 யோஜனை (ஒரு யோஜனை ஓன்பது மைல்) நிலப்பரப்பை அளித்தார்.

கண்ணன் தனக்குக் கிடைத்த நிலப்பரப்பில் துவாரகையை நிர்மாணித்தார். அதில் நான்கு யோஜனை தூரத்தில் தமது அரண்மனையை அமைத்துக் கொண்டார்.

ஊரையும் அரண்மனையையும் அவர் மிகவும் திட்டமிட்டு நிறுவியதாகச் சொல்லப்படுகிறது.

ஹரிவம்சத்தின்படி துவாரகாவுக்கு கிழக்கிலும் வடக்கிலும் கடல் இருந்ததாம். மேற்கே கடலுடன் இணைந்த சிற்றூரும், தெற்கே ரைவதக் என்ற குன்றும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டதட்ட துவாரகா ஒரு தீவில் இருந்தது என்றே சொல்லக் கூடும்.

ஸ்ரீமத் பாகவதம், 12 யோஜனை சுற்றளவுள்ள ஒரு கோட்டை கட்டப்பட்டதாகவும் அதில் துவாரகா இருந்ததாகவும் அறிவிக்கிறது.

இந்த கோட்டை குறிப்பாக எங்கே இருந்தது என்ற விவரம் பாகவதத்தில் இல்லை.

கிருஷ்ணன் அகழி சூழ்ந்த கோட்டை ஒன்றை கட்டினார் என்றும், அகழிக்கு மேல் ஆங்காங்கே பாலங்கள்  கட்டுவித்தார்  என்றும் கதைகளுண்டு.

கண்ணன் துவாரகாவைச் செழிப்பானதாக ஆக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கிருஷ்ணன் காலத்திலேயே சிசுபாலன் துவாரகாவுக்குத் தீ வைத்ததாகவும், பின்னால்  அவன் நண்பன் சால்வன் துவாரகாவைத் தாக்கியதாகவும் தெரிகிறது. அப்பொழுதெல்லாம் கண்ணன் துவாரகாவில் இல்லை: வெளியூர் சென்றிருந்தார். அவருடைய புத்திரர்கள் தலைமையில் யாதவர்கள், சால்வனைத் துரத்தியடித்து துவாரகாவைக் காத்தனர்.

கிருஷ்ணன் துவாரகா திரும்பியதும் விஷயத்தைக் கேள்வியுற்று சால்வனோடு போர் தொடுத்து அவனைக் கொன்றார் என்கிறது மகாபாரதம்.

இதேபோல் பௌண்டிரன் என்ற அரசனும் துவாரகாவைத் தாக்கியதாக ஹரி வம்சம் தெரிவிக்கிறது.

எல்லாமே ஒரு காலத்தில் அழிய வேண்டியது தானே? உன்னத நிலையைப் பெற்றிருந்த துவாரகாவும் கிருஷ்ணன் சமாதியானவுடன் கடல் கொள்ள அழிந்து போயிற்று.

பாரதப்போரில் புத்திரர்களை இழந்த காந்தாரி மாளத் துயர்த்தில் ஆழ்ந்தாள். அவளுக்கு ஆறுதல்  சொல்லும்படி எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கண்ணன் காந்தாரியிடம் சென்றார்.

கண்ணனைப் பார்த்ததும் காந்தாரி கோபம் கொண்டு சபித்தாள்.-

“நீ தான் மாகாபாரதப் போருக்குக் காரணம், பொறுப்பு. ஆதலால் உன்னை நான் சபிக்கிறேன்: நீ உன் உற்றார் உறவினர்கள் அழிந்து போவதற்குக் காரணமாக ஆவாய். இன்னும் முப்பத்தாறு வருடங்களில் உன் வம்சமே இருக்காது. இழிந்த மரணம் எய்துவாய். இன்று கொளரவர் குலப்பெண்கள் அழுவது போல் யாதவப் பெண்கள் அன்று அழுது அழுது அழிவார்கள்!”

ஸ்ரீ கிருஷ்ணனைத் தவிர வேறு எவராக இருந்தாலும் காந்தாரி இப்படி ஒரு சாபம் கொடுத்ததற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள், சற்று நினைத்துப் பாருங்கள்! கிருஷ்ணன் யோகேசுவரனாயிற்றே – புன்முறுவல் பூத்தார்! காந்தாரிக்கு நன்றி கூறினார்.

“தாங்கள்  என் காரியத்தை மிகவும் சுலபமாக்கிவிட்டீர்கள்.  யாதவர்கள் விபத்துக்குள்ளாகி அழிவார்கள் என்பது நான் அறிந்ததுதான். என்னைத் தவிர வேறு எவரும் அவர்களை அழிக்க முடியாது. அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாவார்கள். இது விதி!” என்றார் ஸ்ரீ கிருஷ்ணன்.

தானும் தன் சுற்றமும் அழியப் போவதை எதிர்பார்த்து அதை ஏற்றுக்கொள்ளும் அசாதாரணமான மனநிலை, நிதானம் – அதுவும் அப்படியாவது நடப்பதாவது என்று அடித்துச் சொல்லக் கூடிய ஒரு காலக்கட்டத்தில் – அழிவை வரவேற்கும் துணிச்சல் யோகேசுவரனாகிய ஸ்ரீ கிருஷ்ணனைத் தவிர வேறு எவருக்கு இருக்க முடியும்?

சரியாக முப்பத்தாறு ஆண்டுகள் கழிந்தன. பாரதப் போரைப் பற்றி விவாதம் ஒன்று கிளம்பியது. அதில் சாத்யகிக்கும் கிருதவர்மாவுக்கும் அடிதடியாக, யாதவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதன் விளைவாக முடிவில் எல்லோருமே மாண்டார்கள். சாத்யகி பாண்டவர் சார்பாகவும், கிருதவர்மா கௌரவர் சார்பாகவும் பாரதப் போரில் ஈடுபட்டிருந்தனர் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

யாதவர்களின் முடவை அமைதியான சித்தத்தோடு அதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணன் தன் மகன் பிரத்யும்னன், சாத்யகி ஆகியவர்களின் பினங்களைப் பார்த்ததும் ஆத்திரமடைந்தார். கை முஷ்டியாலேயே அநேக யாதவர்களைக் கொண்றார். இந்த யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய எல்லாப் பிள்ளைகளுமே மாண்டுவிட்டனர். கடைசியில் எஞ்சியிருந்த இரண்டு யாதவர்கள் அவரது கோபத்தை பிரார்த்தனையால் தனியச் செய்தார்கள்.

இங்கே ஒரு முக்கியமான தகவல்: இந்த கலகம் எதனால் ஏற்பட்டது? ஏதேனும் கருத்து வேற்றுமையா காரணம்? இல்லை, இல்லை, குடித்தான் காரணம். கண்ணன் தடுத்திருந்தும் யாதவர்கள் அவன் பேச்சைக் கேளாமல் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள். இன்னும் இது எவ்வளவு பொருந்துகிறது! பணம், பதவி, பலம், போதை – அழிவுக்கு வேறு என்ன வேண்டும்?

சோமநாதர் கோயிலைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். கஜினி முகம்மதுவால் தாக்கப்பட்ட கோவில். அந்தக் கோயில் இருக்கும் சோமநாத் என்ற ஊர் பிரபாஸ் (பிரபாஸம்) என்ற மண்டலத்தில் (நிலப் பகுதியில்) உள்ளது. யாதவர்கள் கண்ணன் சொற்படி இந்தப் பிரபாஸ் பகுதிக்குச் சென்றார்கள். அப்படிச் செல்லும் போதுதான் கண்ணன் அவர்களை மதுவுக்கு அடிமையாகாமல் இருக்கும்படி எச்சரித்தார். யாதவர்கள் அவர் சொல் கேட்காததால் பிரபாஸ் ஷேத்திரத்தில் கூண்டோடு மாண்டனர்.

இந்தப் பிரபாஸ் துவாரகையின் ஆட்சிக்குட் பட்டிருந்தது. இன்று பல புண்ணியத் தலங்கள் நிறைந்து புராணப் பெருமை பெற்ற நிலப்பகுதியாக விளங்குகிறது.

ஸ்கந்த புராணத்தில் ‘பிரபாஸ் காண்டம்’ என்று ஒரு காண்டமே இருக்கிறது.

இப்பொழுது இந்தப் பிரதேசத்தை ‘ப்ரபாஸ் பாடன்’ என்கிறார்கள். பாடனுக்கும் நம்முடைய பட்டணத்துக்கும் எவ்வளவு ஒலி ஒற்றுமை, பார்த்தீர்களா?

யாதவர் மாண்ட நிலையில் கண்ணனின் மனம் வெறிச்சோடியது. காடுகளில் திரிந்து தன் அண்ணன் பலராமனை அடைந்தார். பலராமன் அப்போது லௌகிகத்தை வெறுத்து காட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.

யாதவர் அயிந்த செய்தியை கண்ணன் வாயிலாகக் கேட்டு துயர்ததுக்குள்ளாகி அவர் அப்படியே உயிர் விட்டு விட்டார்.

கண்ணன் என்ன நிலையில் இருந்திருப்பார் – என்று சற்று யோசியுங்கள்!

அவர் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஜரன் என்ற வேடன் தவறுதலாக மான் என்று நினைத்து அம்பு எய்ய. கண்ணன் தன் உன்னத வாழ்நாளை முடித்துக் கொண்டு சமாதியானார்.

மகாபாரதம், விஷ்னு புராணம், ஹரிவம்சம், பாகவதம், தேவி பாகவதம் ஆகியவை கண்ணனுடைய முடிவை வர்ணிக்கின்றன. ஆயினும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சில விவரங்களைத் தருகின்றன. எது எப்படியாயினும்,

“இதோ, இவன் ஒரு முழு மனிதனாக வாழ்ந்தான் என்று இயற்கை எழுந்து மார் தட்டிச் சொல்லும் அளவுக்கு மூல தத்துவங்கள் சரியாக அவனிடம் கலந்து பிரகாசித்தன அல்லவா?”

“ஹரி மந்தர் என்னும் கண்ணன் கோயில் ஒன்றைத் தவிர, கண்ணன் காலமானதும் துவாரகாவைக் கடல் கொண்டது” 

இந்த சோக முடிவு நம்முடைய புராணங்களில் மட்டுமின்றி ஜைன பௌத்த நூல்களிலும் காணக் கிடைக்கிறது.

ஸ்ரீராமபிரானின் கருணை


வாலிக்கு ராமன் கருணை காட்டினான் என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டால். சூர்ப்பணகைக்கும் அவன் கருணை காட்டினான் என்ற தத்துவத்தை உய்த்து உணரத்தான் வேண்டும்.

சூர்ப்பணகை காட்டில் திரிந்துகொண்டிருந்த அரக்கி; ராவணனின் தங்கை. இவளுக்குப் பகவானின் அருள் கிடைத்தது கிடைத்தற்கரிய பெரும் பேறுதான்.

இவள் கானகத்தில் வேறு மார்க்கமாகப் போயிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் ராமன் இருந்த இடத்தின் வழியாக வந்து ராமனின் தரிசன பாக்கியம் பெற்றது அவளது புண்ணியம்தான்.

ரமிக்கச் செய்பவன் ராமன். பார்த்த மாத்திரத்திலே அனைவரையும் கவர்ந்திழுக்கும் பேரழகு படைத்தவன். “தோள் கண்டார் தோளே கண்டார்” என்பதற் கிணங்க அவனுடைய ஒவ்வொரு வடிவழகும் முழுவதும் காண, கண்டு முடியாத மோகனரூப சௌந்தர்யம். அவனது அசாதாரண வடிவழகில் ஈபட்டுச் சூர்ப்பணகை சொக்கிப் போகிறாள்.

ஓரே குடியில் பிறந்த ராவணன், விபீஷணன், சூர்ப்பணகை மூன்றுபேரும் ராமனிடம் ஈடுபட்டவர்கள்தாம்.

ராவணன் ராமனின் வீரப்பிரதாபத்தில் வீழ்ந்தான்.

விபீஷணன் அண்ணலின் கருணாவிலாசத்தில் ஆழ்ந்தான்.

சூர்ப்பணகை சீதாராமனின் ஜகன்மோகன திவ்ய சௌந்தர்யத்தில் வசியமாகி அவஸ்தைப்பட்டாள்.

அஞ்சொல்இள மஞ்ஞைஎன,
அன்னமென மின்னும்
வஞ்சிஎன, நஞ்சமென,
வஞ்சமகள் வந்தாள்.

சூர்ப்பணகை இவ்வாறு வஞ்சமகள் வடிவம் தாங்கிய நஞ்சு போலவும், மானின் விழி படைத்த மயில் போலவும் ராமன்முன் வந்து நின்றாள்.

அவள் அறியாமையைக் கண்டு அவன் மனம் இரங்கினான். அவளிடம் அவன் அழகாக உரையாடியிருக்கிறான். அவளிடம் அவன் மனம்விட்டுப் பேசியது போல வேறு எவரிடமும் பேசியதில்லை என்றே சொல்ல வேண்டும்.

ராமன் தன் சரிதத்தை உள்ளது உள்ள படியே அவளிடம் தெரிவித்திருக்கிறான்.

இப்படி அவன் தன் சரிதையைத் தன் வாய்மொழியாகச் சொல்லியிருப்பது இந்த ஓர் இடத்தில் தான்.

அத்தகைய பாக்கியம் பெற்றவள் சூர்ப்பணகை. இவ்வளவு பாக்கியம் வாய்த்திருந்தும் அது வீணாகிவிட்டது.

காரணம், அவள் ராமனைப் புரிந்துகொள்ளவில்லை. யாரைத் துணையாகக் கொண்டு ராமனைப் பற்ற வேண்டுமோ அந்தச் சீதாதேவியையே பொறாமையால் விழுங்கிவிடத் துணிந்தாள் சூர்பணகை.

சீதாபிராட்டியின் அருள் பெற்ற விபீஷணன் ராமனை அடைந்து உய்ந்து போனான். இவள் பங்கப்பட்டுப் போனாள். ராமனைக் கிட்டச் சீதாதேவியின் கருணை விலாசம் வேண்டும். ராமபிரான் கருணை கிடைத்தும் பயன்படுத்தாமல் பிழைபட்டுப் போனாள் சூர்ப்பணகை.

“இரக்கம் என்றெரு பொருளில்லாதவர் அரக்கர் என்று உளர் அறத்தின் நீங்கினார்” என்று அரக்கர்களை அறிமுகப்படுத்துகிறார் கம்பர்.
அரக்கர்கள் கருணையே இல்லாதவர்கள். ராமபிரானே கருணையே வடிவானவன்.

கருணையே இல்லாதவர்களிடத்தில் கருணை காட்டுவதுதானே கருணாமூர்த்திக்கு அடையாளம்?

இம்மாதிரி அசாதாரணமான கருணை காட்டுவதனால்தான் காகுத்தன் கருணை என்று சிறப்பித்துச் சொல்கிறோம். விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்தது கருணா விலாசத்தின் உச்சக் கட்டம்.

இந்த அபயப்பிரதானக் கட்டத்தில் சரணாகதியைப்பற்றிய அநேக முக்கியமான தத்துவங்கள் வெளிப்படுகின்றன.

ராமன் இருக்கும் இடத்தையே அயோத்தியாகப் பாவித்து சீதாபிராட்டியின் திருநோக்கு. சீதை ராமனுடன் இணைப்பிரியாமல் இருப்பது அவள் தர்மம்.

அவளை ராமனிடமிருந்து பிரித்துச் சிறை எடுத்துச் செல்கிறான் ராவணன். அது தகாத செயல் என்று தர்மோபதேசம் செய்கிறான் விபீஷணன். அவன் தர்மாத்மா. “பகவான் உடைமையை அவனிடம் ஒப்படைத்துவிடு; இல்லையேல் நீ மட்டுமன்று, அரக்கர் குலமே அழிந்துவிடும்” என்று தர்மத்திற்காக வாதாடுகிறான்.

“நம்முடைய புகழ், செல்வம், சுற்றம் முதலியவை நிலைத்திருக்க வேண்டுமானால் சீதையை விட்டுவிட வேண்டும். அவ்வாறு விட்டுவிட்டால் அதைப் போல வெற்றி நமக்கு வேறெதுவும் இல்லை” என்று ராவணனிடம் எடுத்துரைக்கிறான் விபீஷணன்.

விபீஷணன் எவ்வளவோ மன்றாடியும் ராவணன் திருந்தவில்லை; மாறாகக் கடும் சினம் கொள்கிறான். தம்பிமனம் நோக இழித்தும் பழித்தும் பேசுகிறான்.

மூர்க்கர்களுக்கு உபதேசம் பண்ணினால் அது பலிக்காது என்பதை விபீஷணன் அறிவான். இருந்தாலும் அவர்களுக்குக் கூடியவரை நன்மை செய்வதுதான் தர்மம் என்பதனால் உடன்பிறந்த சகோதரனை உரிமையுடன் திருத்தப் பெருமுயற்சி செய்தான்.

அதற்குப் பயன் ஏற்படவில்லை. ராவணனுடைய கொடிய வார்த்தைகளைக் கேட்டவுடன். தன் கையிலிருந்த கதையுடனும், தன் மந்திரிகள் நால்வருடனும் இலங்கையை விட்டு கிளம்புகிறான்.

அப்போது ராவணனின் ஆதரவில் தனக்குக் கிடைத்திருந்த மாளிகை, செல்வம் பெண்டு பிள்ளைகள் மற்றும் விட வேண்டிய அனைத்தையும் துறந்து, ககனமார்க்கமாகப் புறப்பட்டுவிட்டான்.

உற்றார் உறவினர்களையும் உரிமைச் செல்வங்களையும் விடுத்து அந்தரத்திலே நிற்கும் விபீஷணன் ‘ஸ்ரீமான்’ என்று போற்றுகிறார் வால்மீகி.

உலகத்தில் மிகுந்த செல்வம் படைத்தவனையே “ஸ்ரீமான்” என்று போற்றுவது வழக்கம. செல்வங்களைத் துறந்த விபீஷணன் ‘ஸ்ரீமான்’ என்கிறார் வால்மீகி. விடவேண்டியவற்றை விட்டவுடனே நிலையான சம்பத்து அதாவது தெய்விகம் வந்தடைகிறது.

அந்த நிலையான சம்பத்துத்தான் ஸ்ரீராகவனின் கருணை அதனால்தான் வால்மீகி அந்தப் பேரருளாளனை (போரருளுக்கு ஆட்பட்டவனை) ஸ்ரீமான் என்று போற்றிப் பாராட்டுகிறார்.

இலங்கை மண்ணை உதறிவிட்டு மேலே இருந்தவாறே மறுபடி ராவணனுக்கு உபதேசம் செய்கிறான் விபீஷணன்.

‘ஐயோ! அநியாயமாய் அடியோடு அண்ணன் அழிந்து போகிறானே! என்ற கருணையினால் அவ்விதம் செய்கிறான்.
நெருப்பினால் வெந்துபோன வீட்டில் ஏதேனும் ஒரு குச்சியாவது அகப்படாதா என்று துருவிப் பார்ப்பது போலே, ‘காமத்தீயால் கருகிப்போன ராவணன் நெஞ்சில் சிறிதளவாவது ஈரம் இருக்கிறதா? என்று ஆராய கருணையினால் மீண்டும் உபதேசம் செய்கிறான் விபீஷணன்.

செய்ய வேண்டிய முயற்சியைச் செய்யாமலிருப்பது அதர்மமாகும். அதனால்தான் கடைசிவரை முயற்சி செய்து பார்க்கிறான் விபீஷணன்.

அது பலிக்காமற் போகவே அனைத்தையும் துறந்துவிட்டு ராமனிடம் அடைக்கலம் புகச் செல்கிறான்.

‘தர்மத்திற்காக எதனையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் தர்மத்தைத் துறக்கலாகாது’ – இந்த உண்மையை அறிந்தவர்கள் விபீஷணனின் தர்மச் செயலைப் போற்றுவார்கள்; புரியாதவர்கள் தூற்றுவார்கள்.

விபீஷணன் ககன மார்க்கமாக வந்து கொண்டிருந்தபோது சுக்கிரீவன் முதலான வானரவீரர்கள் அவனைப் பார்த்துவிடுகிறார்கள். பிரதிகூலர் தொடர்பு விட்டவுடன் அனுகூலர்கடாட்சம் கிட்டிவிடுகிறது. பதிதர்களை விட்டு நீங்கியவுடனே பரம் பாகவத கடாட்சம் கிடைக்கப் பெறுகிறது.

தமபி சொல்லை மதியாத ராவணனை விட்டு, தம்பி சொல்லை மதிக்கும் ராமனை நாடி வருகிறான் விபீஷணன்.

“எல்லைஇல்  பெருங்குணத்த இராமன் தாள்இணை புல்லுதும், புல்லி, இப்பிறவி போக்குதும்” என்று கருதிய வண்ணம் காகுத்தனிடம் சரணாகதியடைய வருகிறான்.

ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை. எனவே உறவுகளை எல்லாம் விட்டொழித்து ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு; அவன் தாங்களையே சரணமாகப் பற்றுகிறேன் என்கிறான்.

ஸோ ஹம் பருஷிதஸ் தேந
          தாஸவச்சாவமாநித: I
த்யாக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச
           ராகவம் சரணம் கத: II

“பற்றுக பற்றற்றான் பற்றினை
                      அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, பற்றுகளை விட்டால் இறைவனைப் பற்றலாம். இறைவனைப் பற்றினால் பற்றுகளை விடலாமல்லவா?

விபீஷணன் பற்றுகளை விட்டுப் பகவானைப் பற்ற வருகிறான்.

திரௌபதி பற்றுகளை விடும்வரை பரந்தாமன் அருள் செய்யவில்லைய எல்லாப் பற்றுக்களையும் விட்டுவிட்டுக் கண்ணனைச் சரண் புகுந்தாள். ‘கோவிந்தா!’ என்று கதறிக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டாள். திக்கற்ற நிலையிலே அவளுக்கு வேறோர் சொல்லும் சொல்லத் தோன்றவில்லை.

கண்ணீர் ஆறாகப் பெருகிச் சோர, துகில் பற்றியிருந்த கைகள் சோர, மெய் சோர, கோவிந்தா! கோவிந்தா! என்று வாய்விட்டு அலறினாள்.

ஆரா அமுதனின் திருநாமத்தை உச்சரித்த அளவிலே, அவள் நாவில் ஆரா அமுதம் ஊறியது. மெய் புளகாங்கிதமடைந்து உள்ளமெல்லாம் உருகிக் கரைந்தது.

இப்படி உருகிக் கரைந்த நிலையிலும் அணித்தே இருந்த துவாரகையிலிருந்து கண்ணன் நேரில் வந்து அருள் செய்யவில்லை.

அவன் திருநாமமாகிய கோவிந்தநாம சங்கீர்த்தனமே அவளுக்கு அபயமளித்து அவள் மானத்தைக் காத்தது.

கண்ணன் திருநாமம் துகில் வளர்க்கும் சித்துவேலை செய்தது.

இது போலவே இறகிழந்த சம்பாதிமுன், ராமநாமத்தைப் பஜித்த அளவிலே இறகுகள் வானளாவி வளர்ந்தனவாம்.

திரௌபதி கோவிந்தன் நாமத்தை உச்சரித்தாள். அவள் துகில் வளர்ந்து கொண்டே போயிற்று. சம்பாதி ராமன் நாமத்தை உச்சரிக்கவில்லை. சுற்றி நின்ற வானரர்கள்தாம் உச்சரித்தனர் சம்பாதிக்காக; பிறர் பஜித்த அளவிலே ராமநாமம் அவனுக்கு அருள் சுரந்தது.

கண்ணன் பரத்துவநிலையில் அதாவது தெய்வநிலையில் நின்று பக்தர்களைச் சோதித்துக் காப்பான்.

ராமனோ அவதாரநிலையில் அதாவது மனிதநிலையில் பக்தர்களைக் தேடிவந்து தானகவே கருணைபாலித்துக் காப்பான்.

காகுத்தன் கருணையைப் பெறுவதற்கு, சர்வசங்க பரித்தியாகம் அதாவது சகலத்தையும் துறப்பது வேண்டியதில்லை. அவன் எளியார்க்கு இன்னருள் புரியும் எளியவனான சௌலப்யசீலன்.

ஒரு முறை ராமா என்று அவன் திருநாமத்தைச் சொன்னால் போதும் உடனடியாக வந்து பேரருள் புரிவான்.

ஸ்கருதேவ ப்ரபந்நாய தவாஸ்மதி
                      ச யாசதே I
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி
                  ஏதத் வ்ரதம் மம II

ஒருவன் தன் தகுதியின்மையைச் சிந்திக்காமல் என்னை ஒரு முறை சரணம் பற்றினால் போதும்; அவனைச் சகல பூதங்களிடமிருந்தும் ரட்சிப் பேன். இது என் இலட்சியம் என்கிறான் ராகவன்.

என்னை வந்தடைந்து, ‘ஹே ராமா! இந்த ஆத்மா உன்னுடையது’ என்று ஒரு முறை சொன்னபோதிலும் அவனுக்கு அபயம் அளிப்பேன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. இது என் உறுதியான கொள்கை என்கிறான் ராமன்.

மற்ற எந்தக் கொள்கை மாறினாலும் இந்தக் கொள்கை மட்டும் மாறாது.

என்னைச் சரணம் பற்றிய சரணாகதன் என்னை விட்டு விலகப் பார்த்தாலும் நான் அவனை விடாமல் பற்றிக் கொள்வேன் என்கிறது இந்த ராம சரமசுலோகம். ஸர்வதர்மாந் பரித்யஜ்ய என்ற கீதா சரமசுலோகம் போன்று புகழ்ப் பெறுவது இந்த ஸ்ரீராமாயண சரமசுலோகம்.

இதன் மூலம் சரண்யன் சரணாகதனை நான் விடேன் என்ற உறுதிப்பாட்டை வெளியிடுகிறேன்.


திங்கள், 22 ஏப்ரல், 2013

வேடனின் ஆன்மிக வாழ்க்கை

இமாசலம்

வானாறும் தேனாறும் பாய விண்ணளவு வீறு கொண்டு ஓங்கி நிற்கின்றுது இமாசலம், அங்கே சித்தர்களும் முத்தர்களும் கட்டை போல அசைவற்று அரிய பெரிய தவம் செய்கிறார்கள். பலப் பல வகையான நிறங்களும் நறுமணங்களும் உடைய மலர்களைப் பூத்து அணியணியாக மரங்கள் நிற்கின்றன. கொடிய விலங்குகள் இரவு பகலாக இரை தேடி உலாவுகின்றன. சிங்கமும் யானையும் போர் புரிகின்றன. காண்டாமிருகங்கள் கர்ஜிக்கின்றன. மயில்கள் அசைகின்றன; குயில்கள் கூவுகின்றன; பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சுகின்றன. கற்புடைய மாந்தர்களை போல் பூங்ககொடிகள் நெளிந்து நிற்கின்றன. இலைகளும் பூக்களும் உதிர்ந்து தரை மெத்தென்று காட்சி தருகின்றது.

ஆகுகன்

இத்தகைய மாட்சியுடன் காட்சி தருகின்ற பணிமலையில் ஆகுகன் என்ற வேடர் தலைவன் வாழ்ந்து வந்தான். ஆகுகன் தோள்வலிமையும், வாள்வலிமையும் மிகுந்தவன். இருண்டு சுருண்ட தலைமயிரும், முறுக்கிய மீசையும், தருக்கிய சிந்தையும், பொருப்பன்ன தோளும், செருப்பணிந்த காலும் படைத்தவன்.

அவனுடைய பார்வையில் வீரமும், உள்ளத்தில் ஈரமும் தவழ்ந்தன; தேனும் ஊனும் உண்டு பருத்த உடம்பும், கறுத்த நிறமும் கொண்டு, எப்போதும் வில்லேந்தியவனாய் உலாவுவான்.

அவன் வேட்டையாடும்போது, மக்களுக்குத் தீங்குபுரிகின்ற விலங்குகளையே கொல்லுவான். விலங்குக்குட்டிகளையும், வயது முதிர்ந்த விலங்குகளையும், சாதுவான விலங்குகளையும் கொல்லமாட்டான். அவ்வழி வந்த சாதுக்ககளுக்குத் தேனும் தினைமாவும் தந்து உபசரித்து வழியனுப்புவான்.

ஆகுகி

இந்த வேடவேந்தனுடைய மனைவி ஆகுகி. இவள் கணவனுடைய கருத்தறிந்து ஏவல் செய்வாள். கணவனுடைய சொல்லை வேதவாக்காகச் சிரமேற்கொண்டு நடப்பாள். கணவன் வேட்டையாடிக் கொண்டுவந்து தருகின்ற ஊன்களைப் பக்குவம் செய்து, தேன் கலந்து சுவையூட்டிக் கணவனுக்குக் காலம் தவறாது தருவாள். பாவச் செயல்களுக்குக் கூசுவாள். பாலமுதம்போல் இனிமையாகப் பேசுவாள். பிறர் துன்பம் களையும் கருணையுள்ளம் படைத்தவள்.

ஆகுகனும் ஆகுகியும் ஒருவர்மீது ஒருவர் பற்று வைத்து ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இருவரே தங்கக்கூடிய குகையில் அவர்கள் வாழ்வு நீண்ட காலமாக அமைந்திருந்தது. நல்ல மனைவி நமக்குக் கிடைத்தாளே என்று கருதி ஆகுகன் ஆனந்த மடைவான். உத்தமனான கணவனை நாம் பெற்றோம் என்று எண்ணி எண்ணிப் பெருமிதம் அடைவாள் ஆகுகி. சில வேடர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு பொறாமைப் பட்டார்கள்.

சாது முனிவரின் சந்திப்பு


காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சர்யம் என்ற ஆறு பகைவரையும் வென்றவரும். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தியவரும், அருமறையில் வல்லவரும், திரு நெறியில் நின்றவரும், திருநீறு பூசிய நெற்றியும், கண்டிகை தவழும் திருமார்பும் தாழ்ந்த சடைக்கற்றையும், யோகதண்டம் ஏந்திய கரமும், கருணை பொழிகின்ற கண்களும் உடைய ஒரு சாது முனிவர் ஒருநாள் மாலைவேளையில் அங்கு வந்தார்.


அருந்தவ முனிவரைக் கண்ட ஆகுகன் அன்புடன் பணிந்தான்.

‘தபோதனரே! தங்கள் வரவு நல்வரவு. தங்களைக் கண்ட கண்கள் நல்ல கண்கள். கொடிய விலங்குகள் உலாவுகின்ற கொடிய கானகம் இது. நஞ்சுடைய நாகங்கள் நிறைந்த வனம். பல கல் சுற்றளவுள்ள இந்த மலைக்காட்டுக்கு நீர் வந்துவிட்டீர். இப்போது மாலை நேரம். இரவிலேதான் விலங்குகள் இரைதேடி மிகுதியாக உலாவும். காட்டைக் கடந்து போகுமாறு உம்மை விடுவதற்குப் போதிய நேரம் இல்லை. பெரிய துன்பம் நிறைந்த இந்தக் காட்டுக்கு ஏன் வந்தீர்? தங்களுடைய நற்காலத்தால் நான் தங்களைச் சந்தித்தேன். அடியேன் குடியிருக்கும் குகைக்குச் சீக்கிரமாக வாருங்கள். இன்றிரவு அங்கே தங்கி நாளைக் காலை புறப்பட்டுப் போகலாம்” என்று அவருக்கு இன்னுரை கூறி, முனிவரைத் தன் குகைக்கு அழைத்துச் சென்றான். ஒடுக்கமாக உள்ள குகைக்குள் மான் தோலை விரித்து முனீந்திரரை நிருத்தி ஆகுகனும் ஆகுகியும் பல முறை பணிந்தார்கள். அவருக்கு பலாச் சுளைகளைத் தேனில் கலந்து உண்பித்தார்கள். தேன் கலந்த தீஞ்சுவைத் தண்ணீர் தந்து. இன்முகம் காட்டிக் கனியமுதமன்ன இனிய மொழிகள் கூறி உபசரித்தார்கள்.

முனிவர் பெருமான் அவர்களின் அன்பைக் கண்டு அகமிக மகிழ்ந்தார்; ஆசி கூறினார். ‘வெட்டு, குத்து, அடி, உதை, கொல்லு என்று கர்ஜனை புரிகின்ற கொடுங்குணம் படைத்த வேடர்குலத்திற் பிறந்த இவர்கள். நம்மிடம் தாயினும் சாலப் பரிந்து அன்பு செய்கிறார்களே! இது பேராச்சிரியம். ஆ! என்ன அன்பு! எத்தனை பண்பு! முன்பின் அறியாத என்னிடம் பல காலம் பழகியவரைப் போல் அன்பு செய்கின்றார்கள். இவனுடைய குலத்துக்கும் குணநலத்துக்கும் சம்பந்தமே இல்லை’ என்று முனிவர் எண்ணினார்.

அறிவுரை

முனிவர், “அம்மா! அப்பனே! உங்கள் மனம் பால் போன்றது. உங்களை மனப் பூர்வமாக வாழ்த்துகின்றேன். உங்களுக்கு மங்களம் உண்டாவதாக. ஓர் உத்தமமான தத்துவத்தை உங்களுக்கு உபதேசிக்கின்றேன். ஒருமைப்பட்ட உள்ளத்துடன் கேளுங்கள்.

“அறிவுடையவன் அறிவுடையவனிடம் சேருவான். இனம் இனத்துடன் சேரும்; குடியன் குடியனுடன் சேருவான்; பொடியன் பொடியனுடன் சேருவான்; தடியன் தடியனுடன் சேருவான்; கள்ளன் கள்ளனுடன் சேருவான். இதுதான் உல நியதி. இந்த உடம்பு அசித்து (அறிவில்லாதது) உயிர் சித்து (அறிவுடையது). சித்து சித்துடன் சேரும். அசித்து அசித்துடன் சேரும். ஆனால் இந்த நியதிக்கு மாறாக, உயிராகிய சித்துப் பொருள் உடம்பாகிய அசித்துடன் சேர்ந்துள்ளது.

“மாட்டு வண்டியைப் பாருங்கள். மாடு சித்து; வண்டி அசித்து. மாடு தானே சென்று வண்டியில் நுழையாது; வண்டியும் தானே போய் மாட்டின் மேல் ஏறாது. எப்படி மாடும் வண்டியும் ஒன்றுபட்டுள்ளன? வண்டிக்கும் மாட்டுக்கும் எஜமான், மாட்டை இழுத்துப் பிடித்து வண்டியின் நுகத்தடியை மாட்டின் கழுத்தில் வைத்துப் பூட்டாங் கயிறு பூட்டி, வண்டியில் அமர்ந்து அதனைச் செலுத்துகின்றான்”.

இது போல் அந்த அந்த உயிர்களை, அதனதன் கர்மங்களுக்கு ஏற்ப அந்த அந்த உடம்புக்குள் சேர்த்துப் பிராணவாயுவாகிய பூட்டாங்கயிற்றைப் பூட்டி இறைவன் உள்ளே அந்தர்யாமியாக இவற்றைச் செலுத்திக்கொண்டிருக்கின்றான். கடவுவதாலே கடவுள் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டுது.

“அவிழ்த்து விடுகின்ற நேரம் மாட்டுக்கும் தெரியாது; வண்டிக்கும் தெரியாது. அதுபோல் இந்த உயிர் உடம்பினின்றும் பிரிகின்ற காலம் யாருக்கும் தெரியாது. ஜோதிட நூல் வல்லான் தடபுடலாக ஜாதகக் குறிப்பைப் பார்த்துச் சண்டப் பிரசண்டமாகப் பலாபலன்களைக் கூறுவான். ஆனால் உயிர் பிரியும் மரணத்தை நிச்சயிக்க முடியாது”.

“அதலால் உயிர் பிரிகின்ற மரணம் வருமுன் இறைவனுடைய சரணத்தை அடையவேண்டும். இதுதான் வேதரகசியம். வேத இருதயமாக விளங்குவது ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து. இதனை நீவிர் ஓதி உய்வு பெறுங்கள்” என்று நுட்பமான தத்துவத்தை இனிது உபதேசித்தருளினார்.

தியாக சிகரம்.

இரவு 11 நாழிகை. உறங்க வேண்டிய நேரம். அந்தக் குகையில் இருவர் மட்டும்தான் உரங்கமுடியும். மூவர் உறங்க முடியாது.

ஆகுகன் முனிவரை நோக்கி மொழிகின்றான்; “ஞனத் தந்தையே! இந்தக் குகையில் இருவர் மட்டுமே படுக்க முடியும். நானும் இவளும் படுத்து, தேவரீர் வெளியே படுத்தால், விலங்குகள் உம்மைக் கொன்றுபோடும். தேவரீரும் நானும் படுத்து, இவள் வெளியே படுத்தால் அபலையாகிய இவளைச் சிங்கம் புலி முதலிய கொடிய விலங்குகள் கொன்றுவிடும். நான் ஆயுதபாணி. நான்தான் வெளியே இருக்க வேண்டும்.

தாங்கள் ஆசாபாசமற்ற அருந்தவச் சீலர். இவள் பரம பதிவிரதை. தந்தையும் மகளும் ஒன்றாக இருக்கலாம். பிழையில்லை. எனவே நீரும் இவளும் உள்ளே படுத்து உறங்குங்கள். அடியேன் ஆயுதம் ஏந்தி வெளியே இருப்பேன்” என்றான்.

மாதவ முனிவர் வேடனுடைய மாசற்ற மனப்பண்பை எண்ணி அக மகிழ்ந்தார். “என்ன பண்பு! என்ன தியாகம்! மனைவியுடன் மற்றொருவன் தனிமையில் இருக்க எவன் உடன்படுவான்? இவனைப் போன்ற உத்தமர்களைக் காண்பது அரிது” என்று எண்ணி இதயம் உருகினார். அவனுடைய வேண்டுகோளை மறுக்க இயலாது அன்புக்குக் கட்டுப்பட்டார்.

குகைக்குள்ளே முனிவரும் ஆகுகியும் படுத்தார்கள். கதவை மூடி, வில்லேந்திய கையுடன் குகைப்பாறை மீது சாய்ந்து இமையாது நின்றான் ஆகுகன். திருஐந்தெழுத்தை உச்சரித்தவண்ணம் முனிவர் உறங்கினார். பதியின் பதமலரைச் சிந்தித்த வண்ணம் ஆகுகி கண்ணயர்ந்தாள்.

நடுஇரவு, எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. நாயும் பேயும் உறங்குகின்ற நேரம். வேடனும் சிறிது கண்மூடி நின்ற வண்ணமே உறங்கிவிட்டான். கையிலிருந்து வில் நழுவி விட்டது. இரைதேடி வந்த சிங்கம் அவனை அடித்துக் கொன்று தின்றுவிட்டுச் சென்றது.

விடியற்காலை. கணவனைச் சிந்தித்த வண்ணம் ஆகுகி கண்விழித்தாள். சிவத்தைச் சிந்தித்த வண்ணம் முனிவர் விழித்தார். ஆகுகி கதவைத் திறந்து வெளியே வந்தாள். எலும்பு கூடாக இருந்த கணவனைக் கண்டாள். அவள் உத்தமபத்தினி. “ஆ! பிராணநாதா!” என்று அலறினாள்; கணவனுடைய எலும்புக் கூட்டின் மீது சாய்ந்தாள்: அக்கணமே மாய்ந்தாள். முனிவர் இந்த அவலக் காட்சியைக் கண்டு வருந்தினார்.

“அந்தோ! விதி செய்த விளையாட்டு என்னே! நம்மால் இந்த இருவரும் மாய்ந்து விட்டார்கள். பெற்ற பிள்ளைகளைப் போலே இடம் தந்து, உணவு தந்து, இன்சொல் கூறி உபசரித்த இவர்கள் முடிவு பெற்றார்கள். நான் மாண்டிருந்தால் யாருக்கும் நஷ்டம் இல்லை. இந்த வேடர் பெருமான் பரம உபகாரி. இந்தக் காட்டுக்கு வரும் வழிப்போக்கர்களுக்கு நலம் செய்பவன். கணவன் மறைந்த கணமே இவள் உயிர் துறந்தாளே? எத்தனை அன்பு!” என்று கூறிப் புலம்பியழுதார்.

ஓமாக்கினியை வளர்ந்தார்; மந்திர நீரால் இரு உடம்புகளையும் அலம்பினார். கட்டைகளை அடுக்கி இரு உடம்புகளையும் வைத்து ஓமாக்கினியை வைத்து மூட்டினார். இரு பிணங்களும் தீயில் வேவதைப் பார்த்து அவரால் துயரம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த எரியும் நெருப்பில் அவரும் மூழ்கி விட்டார். மூவருடைய ஆன்மாக்களும் சாந்தியடைந்தன.

முனிவருக்கு உணவும் இடமும் தந்த தியாகத்தின் பயனாக ஆகுகன் என்ற வேடன் நளச் சக்கரவர்த்தியாகப் பிறந்தான். கற்புடைய ஆகுகி தமயந்தியாகப் பிறந்தாள். முனிவர் பெருமான் அன்னமாகப் பிறந்து, தம்மால் பிரிந்த தம்பதிகளைத் தூது சென்று ஒன்றுபடுத்தினார்.


ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கோபத்தைத் தவிர்க்கும் வழி


ஆன்மிக வாழ்க்கையில் கோபம் என்பது அறவே இருக்கக் கூடாது. அவ்வாறு கோபம் இருந்தால் அது மிக பெரிய ஆன்மிக ஏறாமற்றத்தை உண்டாக்கிவிடும் உங்களையறியாமள்.

கோபம் எதனால் வருகின்றது: - ஒரு செயலைச் செய்யும்போது அல்லது பார்க்கும் போது அதன் மீது நமது நாட்டம் போகின்றது. அந்த நாட்டம் அளவு கடந்தாக இருந்தால் அதிக எதிர்பார்புடன் இருக்கின்றோம். நாம் எதிப்பார்தபடி பார்க்கும் செயல் இல்லையென்றாலும் அல்லது எதிர்பாத்த படி நாம் செய்யும் செயல் இல்லையென்றலும் அதிகமான கோபம் மற்றும் வெறுப்பு வருகின்றது. இது மனிதனுக்கு இயற்கையாக வரக்கூடயதாகும். எனவே அதனை அதன் போக்கில் விட்டுவிடாமல் நிலைமை என்னவென்று அறிந்து சிறிது சிறிதாக நம் உணர்ச்சிகளை கட்டுபடுத்த அல்லது பழக்கப்படுத்த விட்டோமானால், இது நாலடைவில் நமக்கு ஒரு பெரிய மழம் கொடுக்கும் மரமாக மாறி அதிக மனோபலத்தை பெற வழி செய்கின்றது அல்லது அபாரமான சகிப்புதன்மையை உன்டுபன்னுகிறது.  இதனை அம்சமாகக் கொண்டு மனிதனுக்கு இயற்கைக் கொடுத்த திறமையை இதன் மூலம் வெளிக் கொண்டுவரலாம்.

கோபத்தை தவிர்க்க கிழே கொடுக்கப்பட்டுள்ள கதை ஒன்று எளிமையான வழி காட்டுகின்றன:

ஒரு பெரியவருக்கும் ஒரு வயாபாரிக்கும் தகராறு.

ஒரு விஷயத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்று வியாபாரி விரும்பினார். ஆனால் அது பெரியவருக்கு பிடிக்கவில்லை.

ஒரு சமயம் இது பற்றிப் பேசுவதற்காகப் பெரியவர் வியாபாரியின் வீட்டிற்குச் சென்றனர். வேலைக் காரனைப் பார்த்து, “ஐயா வீட்டில் இருக்கிறாரா?” என்று விசாரித்தார்.

இதை உள்ளேயிருந்தே கேட்டுக் கொண்டிருந்த வியாபாரி இவர் காதில் படும்படியாக, “ஐயா இல்லையென்று அந்த மடையனிடம் சொல்” என்றார்.

இதைக் கேட்ட பெரியவர், “கடவுள் உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இதைக் கேட்டு வியாபாரியின் மனதும் மாறிற்று. அன்று மாலையே பெரியவரைத் தேடிக்கொண்டு வியாபாரி அவர் வீட்டுக்குச் சென்றார்.

“நான் உங்களை எவ்வளவோ கன்னாபின்னாவென்று பேசியிருக்கிறேன். ஆனால் உங்களுக்குக் கோபம் வருவதில்லேயே, எப்படி?” என்று கேட்டார்.

அதற்குப் பெரியவர், “கோபமே வராமல் இருக்க நான் ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன்.

“கோபம் வரும்பொழுது நாம் என்ன பண்ணுகிறோம்? கத்திப் பேசுகிறோம். கோபமாக இருக்கும்போது மெதுவாகப் பேச முடியாது. அதைப் போலவே மெதுவாகப் பேசினால் கோபம் வராது.

ஆகவே எப்பொழுதும் மெதுவாகப் பேசுவது என்று நான் வைத்திருக்கிறேன்” என்றார்.

என்ன பெருமை?

சீடன் ஒருவன் தன் குருவைக் கண்டு வணங்குவதற்காகக் காணிக்கைப் பொருளுடன் சென்றுகொண்டிருந்தான். அந்தக் குருவின் மீது ஏற்கனவே பொறாமைக் கொண்டிருந்த யோகி ஒருவர் அந்தச் சீடனை வழிமறித்தார்.

 அவனைப் பார்த்து, “உன் குருவிற்கு எதுவுமே தெரியாது. அவர் ஒரு முட்டாள். நீ அவரைவிடப் பெரிய முட்டாள். அதனால்தான் நீ அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளாய். உன் குருவால் ஏதேனும் அற்புதம் செய்து காட்ட முடியுமா? என்னைப் போல் அவரால் நீரில் நடக்க முடியுமா? வானத்தில் பறக்க முடியுமா? அல்லது பூமியில்தான் புதைந்து கிடக்க முடியுமா? அவரால் எதுவுமே முடியாது. அப்படிப்பட்ட குருவிடம் சென்று ஏன் உன் நேரத்தை வீணாக்குகிறாய்?” என்று தற்பெருமையுடன் கேட்டார்.

 அதற்கு அந்தச் சீடன், “நான் ஏன் அவரைக் குருவாகக் கொண்டிருக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன் தெரியுமா? அவர் எப்பொழுதும் பிறரைக் குறை சொல்லமாட்டார், கோபப்படமாட்டார். இவற்றைத்தான் நான் அற்புதங்களில் எல்லாம் மிகச் சிறந்த அற்புதம் என்று நினைக்கிறேன்” என்று பதில் தந்தான். இதைக் கேட்ட யோகி தலைக்கவிழ்ந்தபடி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

 மனிதன் பல விலங்குகள் செய்யும் சாகசங்களையும், பறவைகள் செய்யும் வித்தைகளையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அவ்வாறு அது அவசியம் என்றால் விலங்குகளுக்கு என்று இருக்கின்ற சில வெளித்தோற்ற சிறப்பியல்புகளை கடவுள் மனிதனுக்கும் கொடுத்திருப்பார். மனிதன் மனிதத் தன்மையோடு  மனிதனாக வாழவேண்டும் என்பதே இயற்கையின் நீதி. இதை மீறினால் இயற்கையின் அழிவுக்கு மனிதனே காரணமாகிவிடுகிறான்.

 ஆனால் ஒரு உண்மை இயற்கையின் எழிலை மனிதன்தான் சீற்குலைக்கின்றான். அவனால் செய்யப்படும் வினைகளை மாற்றங்களை முழுமையாக மறுசுயற்சி செய்யமுடியவில்லை தினறுகின்றான்.

சாப்பிட்ட பொருள் முழுமையாக ஜீரனம் அடையாவிட்டால் வயிற்று வலி தான் வரும். அது போன்று என்ன செயல் இயறக்கைக்கு ஒவ்வாமையைக இல்லாமல் இருக்கின்றதோ அதையே செய்து மற்றவைகளை செய்யாமல் அமைதியான போக்கில் உலகை வழி நடத்த வேண்டும், என்பதற்காகவே நமது முன்னேற்கள் ஆம்மிக வழியில் பல நுனுக்களை நமக்கு முன்கூட்டியே சொல்லியிருக்கின்றனர் ஆனால் அதன் அர்த்தங்கள் ஆழமானவை.

விஜயதசமி


நவராத்திரியின் கடைசி நாளில் கொண்டாடப் பெறும் பண்டிகை விஜயதசமி.

வஜயதசமிப் பண்டிகையை நம் நாட்டின் ‘கலைப் பண்டிகை’ என்றுதான் சொல்லவேண்டும். அஷராப்பியாஸம் செய்ய உகந்த நாள் இது.

அன்றைத் தினம் புனர்பூஜை செய்து, கலைமகளின் திருவடிகளைப் பணிந்து, கல்வி கற்பர். புதுத் தொழில்களை ஆரம்பிப்பர். சிலர் பிரயாணங்களைத் தொடங்குவர்.

விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பெறும் நற்காரியங்கள் எல்லா வழிகளிலும் வெற்றி அடகின்றன. ஆலைகளிலும் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

பண்டைக் கால மன்னர்கள் விஜயதசமி யன்று சிம்மாசனம், வெண்கொற்றைக் குடை, செங்கோல், சாமரம் மற்றும் தங்கள் படைக் கலங்களையும், யானை குதிரை போன்ற வாகனங்களையும் பூஜித்து வந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் கண்டறிகிறோம்.

விஜயதசமியன்று வன்னிமரத்தை வழிபடுவது ஒரு சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது. விஷ்னு கோவில்களில் ஸ்வாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னிமரம் குத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது.

அஞ்ஞாதவாசத்தை மேற்கொள்ளப் புறப்பட்ட பாண்டவர்கள், தங்களது ஆயுதங்களை வன்னிமரத்துள் மறைத்து வைத்துச் சென்றதாகக் கூறுவர்.

ஒரு சமயம் உலகமாதா பரமேசுவரி வன்னிமரத்து நிழலில் எழுந்தருளி இளைப்பாறினாள். அது சமயம் சீதா தேவியைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்த அனுமான் வன்னிமர்த்தடியை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டான் என்று கூறப் பெறுகிறது.

இக்காரணம் பற்றியே பரமேசுவரி எழுந்தருளிய வன்னிமரம் துர்க்காதேவியின் சாந்நித்யம் என்று கருதப்பெறுகிறது. இதனால் வன்னி மரத்தைப் பூஜிப்பதால் பாவ நிவிருத்தியும் சத்ருநாசமும் ஏற்படுகின்றன.

விஜயதசமிநாள்  ஜயம், வீரம், செல்வம், கல்வி, ஆகிய அனைத்துக்கும் முக்கிய தினமாகக் கருதப்பெறுகிறது.

விஜயதசமிப் பண்டிகையன்று புனர்பூஜை புரிந்து, வன்னிமரத்தை வணங்கினாள், அன்னை மகிஷாசுரமர்த்தினியின் திருவருளாள் அன்றைய தினத்தில் தொடங்கும் புதிய காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது வெற்றியை நோக்கி செல்லும். புதிய ஆன்மிக அன்பர்கள் அன்றைய தினமே ஆன்மிக வாழ்க்கையை தொடங்கினாள் ஆன்மிகப் பாதையில் சிறந்த முன்னேற்றம் காணலாம் அதுமட்டும்யின்றி வாழ்க்கையில் சோகங்கள் வராது மங்களகரமான வாழ்க்கையே உண்டாகும்.

மேன்மக்கள் யார்?


அறிவு படைத்த மக்களில் மூன்று பிரிவு உண்டு

1.    கீழ்மக்கள்
2.    மக்கள்
3.    மேன்மக்கள்

கீழ்மக்கள்: மக்களாகப் பிறந்தும் மாக்களைப் போல் (விலங்குகளைப் போல்) உண்பதும் உறங்குவதும் பொருந்துவது மாகவே காலங் கழிப்பார் கீழ்மக்கள், பசி தாகங்களை அவிப்பதிலேயே நாட்டமுடையவர்.

மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்ற ஈவு இரக்கம் சாந்தம் சீலம் முதலிய நற்குணங்களையுடையவராய் வாழ்பவர்.

மேன்மக்கள்: மக்கள் பண்பாட்டைப் பெற்றதோடு அமையாது, தெய்வத்தன்மை பெற்று, அருளாளராய், பிறகுக்கென்றே வாழ்பவராய், ஒவ்வொரு மூச்சும் உலகம் உய்யும்பொருட்டே வடுபவராய் வாழ்பவர்.

நம்மில் பலரை மக்களென்ற பேரும் வடிவம் கொண்டு, மக்கள் போலவே அருந்துதல் பொருந்துதலுடன் அமைந்து, துன்பத்தை இன்பமாக மயங்கி எண்ணி ஆமை போல் தெளிவின்றித் திறிகின்றனர்.

ஆமையைக் கொன்று தின்போர் அதன் முதுகில் கெட்டியான ஓடு இருப்பதால், அதனை எளிதில் கொல்ல கிழ்கண்டவாறு முயலுவர்.

மூன்று கற்களின் மீது பெரிய இரும்புக் கொப்பரையை வைத்து, நிரம்பத் தண்ணீர் விட்டுத் தீயை மூட்டி, அதில் ஆமையை விடுத்து, மேலே ஒரு தட்டை மூடிவிடுவர். ஆமைக்கும் சுவர்க்கலோகம் கிடைத்திருப்பதாக எண்ணி, இப்படியும் அப்படியுமாக நீரில் நீந்தி விளையாடும். தண்ணீர் சூடு ஏறிக் கொதிப்புற்றவுடன் அடிப் பகுதியில் சதையுள்ள ஆமை மாண்டு ஒழியும்.

அதுபோல, வாத, பித்த சிலேத்துமமாகிய மூன்று கற்களின் மீது உடம்பாகிய இரும்புக் கொப்பரையைக் கூற்றுவானாகிய கொலைஞன் வைத்து ஆசையாகிய தண்ணீரை விட்டு, ஆன்மாவாகிய ஆமையை அதில்  விடுத்து. பிராரப்த கர்மமாகிய தீயை மூட்டி, பந்த பாசமாகிய தட்டினால் மூடி வைத்திருக்கிறான். துன்பத்தை இன்பமாக எண்ணி ஆமை நீரில் நீந்தி விளையாடுவது போல் மனிதர்களாகிய நாம் தடுமாறுகிறோம்.


பாவமும் புண்ணியமும்

துறவி ஒருவருக்கு நரகத்தையும் சொர்கத்தையும் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

நேராக நரகத்திற்குச் சென்றார். அங்கே ஒவ்வோர் இடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் இல்லாத நொண்டி ஒருவன் இந்தான்.

அவனிடம், “நீ யார்? நீ ஏன் நரகத்தற்கு வரவேண்டி வந்தது?” என்று கேட்டார்.

“துறவியாரே! நான் மண்ணுலகில் பெருஞ் செல்வனாக இருந்தேன். நிறையப் பாவங்களைச் செய்ததால் இங்கே நரகத்தில் துன்பப்படுகிறேன்” என்றான் அந்த நொண்டி.

துறவி நரகத்தை விட்டு நீங்கிச் சொர்க்கத்திற்குள் நுழைந்தார். அங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவரும் ஒவ்வோரிடமாகப் பார்த்துக்கொண்டே வந்தார்.

ஒரிடத்தில் ஒரு கால் மட்டும் தனியாக இருந்தது. அதைப் பார்த்துத் துறவி பெருவியப்படைந்தார். உடனே பக்கத்திலிருந்த ஒருவனை அழைத்து, “ஆள் இல்லாமல் ஒரு கால்  மட்டும் சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?” என்று கேட்டார்.

அதற்கு அவன், “துறவியாரே! இந்தக் காலுக்கு உரியவன் கொடிய பாவி. அவன் செய்யாத பாவம் இல்லை. ஆனாலும் ஒரே ஒரு முறை தாகத்தால் தவித்த ஒரு மாட்டிற்கு இரங்கித் தொலைவில் இருந்த தண்ணீர்த் தொட்டியை இந்தக்க காலினால் உதைத்து அதனருகில் தள்ளினான். அந்தப் புண்ணியத்தால்தான் இந்த ஒரு கால் மட்டும் இங்கு உள்ளது. அவனோ நரகத்தில் துன்பப்படுகிறான்” என்று விளக்கம் தந்தான்.

புதன், 10 ஏப்ரல், 2013

கடவுளைக் காட்டும் பாதை

பொதுவாக சமயத்தைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை.
சமூகத்தின் விதிகளுக்கிணங்க ஏதோ கோவிலுக்குச் செல்வதும், விரதங்களை அனுஷ்டிப்பதும், சடங்குகளைச் செய்வதும் ஆகிய இவையே சமயம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம்.

இவற்றைத் தவிர பல மூடப்பழக்க வழக்கங்களும் நம்மிடையே தோன்றி, சமயத்தின் ‘ஓர் அணிகலன்’ போலவும் அவை விளங்குகின்றன.

நமது சமயத்தைப் பற்றி ஒர் இடத்தில் சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு கூறினார்.

“கோபுரம் போன்றது வானுயர்ந்து ஓங்கி வளர்ந்து, நிரந்தரமாக நிற்கும் சமயமே நமது இந்து மதம். அந்த ஆலயத்தை அடையத்தான் எத்தனை வழிகள்! அதில் எதைத் தான் நாம் பார்க்க முடியாது? நிர்க்குணமான எங்கும் வியாபித்திருக்கும் பரப்பிரம்மத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், சக்தி, விநாயகர், காளி போன்ற எத்தனை தெய்வங்கள்!..

“ஒரு சமயம் ஒரு கோவிலை நோக்கி பலர் சென்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆவல் மிகுதியால் உந்தப்பட்டு, நானும் அந்தக் கூட்டத்தினரோடு சேர்ந்து கொண்டு அந்த ஆலயத்திற்குள் சென்றேன்.

“ஆனால் அதற்குள் நான் பார்த்தது தான் என்ன? ஒருவரும்  இறைவனின் சந்நிதானத்திற்குப் போகவே இல்லை! சந்நிதானத்தின் வாயில் கதவுகளுக்கருகில் ஐம்பது தலைகள், நூறு கைகள், இரு நூறு வயிறுகள், ஐநூறு கால்கள் கொண்ட ஒரு பெரிய உருவச்சிலை இருந்தது. ஒவ்வொருவரும் சந்நிதானத்திற்குள் செல்லாமல் அந்தப் பெரிய உருவச்சிலையின். கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவ்விதம் விழுந்து உருண்டு கொண்டிருந்தவர்களில் ஒருவனிடம், நான் அவர்களின் அந்தச் செயலுக்கான காரணம் என்ன என்று விசாரித்தேன்.

“அதற்கு அவன், ‘உள்ளே, கர்ப்பகிரகத்திலுள்ள தெய்வத்திற்கு ஒரு வணக்கம் செலுத்தினாலோ, அல்லது சில பூக்களைப் போட்டாலோ போதுமானது. ஆனால் உண்மையான பூஜையை இதோ இங்கே வாயிலில் நிற்கும் இந்தத் தெய்வத்திற்குத்தான் போடவேண்டும்’ என்று பதில் கூறினான்.

“சரி, அப்படியானால் இந்தத் தெய்வத்தின் பெயர்தான் என்ன?” என்று நான் கேட்டேன்.

“அதற்கு அவன், ‘இது தான் புகழ் பெற்ற மூடநம்பிக்கை வழக்கம்’ என்ற பதிலை அளித்தான்.

‘இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களெள்லாம் சமயமல்ல’ என்று சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் கூறிகிறார்.

அப்படியானால் சமயம் என்பது என்ன?

ஆன்மிக வழியில் ஆத்மஞானம் பெறுவதுதான் சமயம்.

இந்தக் கருத்தையே ஆதி சங்கரரூம், “ ஒருவன் கங்காசாகரத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளலாம், விரதங்களைக் கடைப்பிடிக்கலாம். தானா தர்மங்கள் செய்யலாம். ஆனால் உண்மையான ஞானம் பெறாமல் இவற்றின் மூலம் மட்டும் நூறு பிறவிகளானாலும் முக்தி பெற முடியாது” என்று கூறுகிறார்.

சுவாமி விவேகானந்தர் தர்ம சிறுவராக இருக்கும் போதே ஆத்தம ஞானம் பெற விரும்பினார்.

அதன் பொருட்டு அவர் சமயப்பற்று கொண்ட பலரிடம் சென்று.
“நீங்கள் இறைவனைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று வினவினார்.

ஆனால் ஒருவராலும் அவர் கேட்ட கேள்விக்கு, “ஆம், பார்த்திருக்கிறேன்” என்று உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருவர் மட்டுமே அவரிடம், “ஆம், நான் பார்த்திருக்கிறேன்.”  உன்னிடம் பேசுவது போல் இறைவனிடமும் பேசுகிறேன்” என்று தெளிவாகவும் தயங்கமாலும் பதில் கூறினார்.

நவீன விஞ்ஞானம் நேரான அனுபவம் இல்லாமல் எதையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அது ஒவ்வொன்றிக்கும் தக்க நீருபணம் கேட்கிறது.

மேலும் சில விஞ்ஞானிகளோ இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறார்கள். அதற்குக் காரணம், அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதற்கு உரிய போதிய சாட்சியங்களை அவர்கள் பார்க்காததுதான். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கும் திட்டவட்டமான பதில் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து கிடைக்கிறது. அவர் நேராக இறையனுபூதியைப் பெற்றிருப்பதுதான் இந்த நவீன விஞ்ஞானிகளுக்குப் போதிய சாட்சியமும் நிரூபணமும்.

தமது ராஜயோக விரிவுரையில் சுவாமி விவேகானந்தர் சமயத்தைப் பற்றி பின்வறுமாறு விளக்குகின்றார்.-

“ஒவ்வொரு ஜீவன்மாவிலும் தெய்விகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்தத் தெய்விகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான இலட்சியமாகும்.

‘இதைக் கர்மயோகம், கடவுள் வழிபாடு, மனக்கட்டுப்பாடு, தத்துவ விசாரம் என்னும் இவற்றில் ஒன்றினாலோ, பலவற்றினாலோ, எல்லாவற்றினாலோ செய்து சாதித்துச் சுதந்திரமாய் இரு.

“இதுவே சமயத்தின் மழு உண்மை ஆகும். சமய சித்தாந்தங்களோ, ஆகமக் கட்டுப்பாடுகளோ, சமயச் சடங்குகளோ, சாஸ்திரங்களோ, கோவில்களோ, இவை போன்ற மற்றவையோ, இதற்கு உதவி புரியும் இரண்டாம் தரமான முக்கியதத்துவமுடைய சாதனங்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன.”

ஆகையால் சுவாமிஜி கூறியதுபோல் சடங்குகள், கொள்ளைகள் போன்றவை மிகவும் முக்கியமானவையல்ல.

நமக்குள் மறைந்திருக்கும் தெய்விகத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். அதன் மூலம் விடடுதலையடைவதே – முக்தி பெறுவதே – நமது இலட்சியமாக அமையட்டும்.

விடுதலை? எதிலிருந்து விடுதலை? நமது பந்தங்களிலிருந்து விடுதலை.

அப்படியானால் இந்த பந்தம் என்பதுதான் என்ன?

இறைவனை நமது கண்களிலிருந்து மறைக்கும் நம்மிடமுள்ள அறியாமையே பந்தம் எனப்படும்.

உண்மையான ஞானம் – அறியாமையால் (அஞ்ஞானத்தால்) – மறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறியாமை காரணமாகத்தான் மனிதன் மாயை என்ற வலையில் சிக்கியிருக்கிறான்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள் போன்ற எல்லாவற்றுக்கும் நம்து அறியாமையே காரணம்.

உண்மையில்  நாம் தெய்வாம்சம் பொருந்தியவர்களே!

சுதந்திரமானவர்களே! இந்த உண்மை நமது அஞ்ஞானத்தால் நம்மிடமிருந்து மறைக்கப் பட்டிருக்கிறது.

எப்போது நமது அறியாமை – ஞானம் என்ற அக்கினியில்  - எரிந்து சாம்பலாகிறதோ, அப்போத நாம் விடுதலை பெற்று விடுகிறோம்.

“உண்மை ஒன்றே. ஞானிகள் அதைப் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.”

எல்லா மதங்களும் உண்மையானவையே! அவை அனைத்தும் ஒரே லட்சியத்தை நோக்கித்தான் செல்கின்றன.

இந்த உண்மையை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அனுபவபூர்வமாகக் கண்டார்; காட்டினார்; நிலை நிறுத்தியும் இருக்கிறார்.

தவற்றைத் திருத்திக் கொள்ளும் மனோபாவம்

 செய்வது தவறு!” என்று நாம் செய்த தவற்றைப் பிறர் சுட்டிக்காட்டும் போது, அது நம் தன்மானத்தில் இடிக்கிறது. எனவே நாம் வெட்கப்படுகிறோம்; கோபப்படுகிறோம்.

“அது தவறில்லை. நாம் செய்தது சரி” என்பதற்கு ஆயிரம் சமாதானம் – நொண்டிச் சாக்கு காணபதில் இறங்குகிறோம்.

தவற்றைத் தவறு என்று ஏற்றுக்கொள்வதற்கு அசாத்திய துணிவு வேண்டும்; பெருந்தன்மை வேண்டும்.

ஒரு விஷயம் தவறு என்று உணரும்போது சரியான வழியைக் காண நம் மனம் முயல்கிறது.

தவறு என்று உணராதபோது அல்லது உணர மறுக்கும்போது – நாம் செய்த தவறுக்கு நொண்டிச் சமாதானம் சொல்லும்போது – மனதிற்கு சரியான வழியைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இது காரணமாகக் தவறுகளைக்கூட “சரியானவை” என்று மாறுபட்டுச் சிந்திக்க மனம் பழகுகிறது. மனம் இதனால் குழப்ப மடைகிறது.

டாக்டர் மேக்ஸ்வெல் மாட்ஸ் என்ற மனவியல் அறிஞர் கூறுகிறார்:

“லட்சியம் வழிகாட்ட மனம் நடக்கிறது; தவறு நேரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் சரியான பாதைக்கு வருகின்ற – தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் ஒரு மகத்தான சாதனம்தான் மனம்” என்கிறார் அவர்.

தவறு செய்யாதவர்கள் உலகில் இல்லை.

“தவறிழைப்பது மனித இயல்பு” என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி.

தவறிலிருந்து மீள்வதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை.

நாம் செய்யும் தவற்றைக் கூட ‘சரி’ என்று வாதிட முன்வருவது எது? நம் ஆணவம்தான்.

இந்த ஆணவம் – அகங்காரம் – உண்மை நிலவரத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியாத படி நம் கண்ணை மறைக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; புரிந்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஜேம்ஸ் ஆலன், “நல்ல முயற்சியினாலும் திறமையினாலும் அடைந்த வெற்றி நிரந்தரமாக இருக்க வேண்டுமானால், அந்த வெற்றி சதா சர்வ நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்” என்கிறார்.

“ஆகா! நான் உச்சிக்கு வந்துவிட்டேன். இனியாரும் என்னை அசைக்க முடியாது!” என்று ஆணவத்துடன் அலட்சியப் போக்கைக் கைக்கொள்ளும் தலைவனும் சரி, “எனது நிறுவனம் இந்த ஆண்டு இவ்வளவு லாபத்தை ஈட்டியிருக்கிறது. எங்களை முதலிடத்திலிருந்து யாரும் அசைக்க முடியாது” என்று நினைக்கும் ஒரு நிறுவனத் தலைவனும் சரி – வெகு விரைவில் போட்டியாளரால்  தோற்கடிக்கப் படுவார்கள்.

‘நான் நேற்றுவரை நல்லவனாயிருந்தேன்’ என்பது எடுபடாது. தொடர்ந்து நல்லவராக இருக்கிறோமா என்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது; உண்மை இருக்கிறது.

மனிதன் தன்னைத்தானே கண்காணித்துக் கொண்டிருந்தால்தான் முன்னேற முடியும்.

மனிதன் தன்னைத்தானே தவறு கண்ட விடத்து திருத்திக்கொள்ள முன்வந்தால்தான் முன்னேற முடியும்.

வாட்டர்கேட் ஊழலில் குற்றம் நிரூபிக்கப் பட்டபோதிலும், “நான் குற்றவாளியல்ல” என்று சொல்லிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிச்சன் கடைசியில் பதவி இறங்கி அவமானப் பட நேர்ந்தது. குற்றத்தை அவர் முன்பே ஒப்புக்கொண்டிருந்தால், சட்டமன்றம் அவரை மன்னித்திருக்கக் கூடும்.

“கிழே விழுவது தவறல்ல; மீண்டும் எழுந்து நிற்காததுதான் குறை” என்றார் ஓர் அறிஞர்.

அதேபோல, தெரியாமல் தவறு செய்வது பெரும் பாவமல்ல, தவறு என்று தெரிந்த பிறகும் சரியான வழியில் நடக்கத் தவறுவது தான் பெரும் குறை.

வாழ்க்கை என்பது ஒரு பாடம். தொடர்ந்து அனுபவங்கள் வாழ்க்கையில் நமக்குப் படிப்பினைகளைத் தருகின்றன. அதில் மனம் உண்மையையும் பொய்யையும் பிரித்துப் பார்க்ககவும், மீண்டும் சரியான வழியில் நடந்து செல்லவும் முயல வேண்டும்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த முயற்சி; தொடர்ந்த போராட்டம். வாழ்வு ஒரு தொடர்க் கல்வி.

“இந்த உலகம் ஓர் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நம்மை நாம் வலிமையுடையவர்களாக்கிக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

வெற்றியாளர்களை ஆராய்ந்தோமானால் யாருமே நூறு சதவிதம் சரியான முடிவெடுத்தவர்களாக இருந்ததில்லை; தவறே செய்யாமல் பூரணத்வம் பெற்ற மனிதர்களாக யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அவ்வப்போது இருக்கும் நிலைமைகளை ஆராய்ந்து நம் அனுபவத்திற்கேற்ப, நமது மனச்சாட்சிக்கேற்ப ஒரு முடிவுக்கு வருகிறோம். அது பின்னால் தவறாகப் போகலாம். ஆனால் முடிவெடுத்த சமயத்தில் நியாயமான காரியத்தைச் செய்தோமா என்பதுதான் கேள்வி.

“வெற்றிகளிலிருந்து நாம் எந்தப் பாடத்தையும் படிக்க முடியாது; தவறிலிருந்துதான் நாம் கற்றுக்கொள்ள முடியும்” என்கிறார்கள் அறிஞர்கள்.

நேரான பாதை என்ற முக்கிய தடத்திலிருந்து தவறுகள் நம்மை வேறு தடங்களில் இறக்கி விடுகின்றன. அதை உணர்ந்தவுடன் நாம் நமது வழியைத் திருப்பி, மீண்டும் போக வேண்டிய சரியான முக்கிய தடத்திற்கு வந்து சேருகிறோம்.

ஆத்மா முன்னேற வாய்ப்பளிக்கப்பட்ட இடம். அதை உணர்ந்து வாழ்கிறோமா என்பதைத்தான் அடிக்கடி சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும்.

“தவறுகளாகவே என் வாழ்க்கை அமைந் திருக்கிறதே!” என்று புலம்பத் தேவையில்லை. சிலருக்கு தவறுகளிலிருந்து மீள்வதற்கு அதிகப் பயிற்சி தேவைப்படுகிறது. சிலர் ஓரிரு தவறுகளிலேயே உண்மைகளைப் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.

“தவறுகளை வாழ்த்துங்கள்; கெட்ட சூழ்நிலை தோன்றினால் அது மாறிவிடும் என்று ஆசி கூறி நம்பிக்கைத் தெரிவியுங்கள்.”

“முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாகவே நீ நினைத்தாலும் அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். நீ அப்படிப் பட்ட தவறுகளைச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று நம்புகிறாயா? எனவே நீ செய்த தவறுகளை வாழ்த்து. அந்தத் தவறுகள் உன்னை அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!”


குருநானக் அருள்வாக்கு

1.    இறைவனின் சங்கல்பமே உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அருடைய சங்கல்பம் ‘இவ்வளவுதான்’ என்று வர்ணிக்கும் சொற்களில் அடங்காமல் கடந்து விளங்கிறது.

தெய்வ சங்கல்பத்தின் மூலமாகவே மகிமை கிடைக்கிறது.
அவருடைய சங்கல்பத்தினால் சிலர் உயர்ந்த வர்களாகவும், சிலர் தாழ்ந்தவர்களாகவும் பிறக்கிறார்கள்.
2.    இறைவனின் சங்கல்பப்படியே மக்கள் சுகங்களையும்
துக்கங்களையும் அடைகிறார்கள்.

இறைவன் சங்கல்பத்தினாலே தூய பக்தர்கள் முக்தியும் பெறுகிறார்கள்.
 
3.    பக்தி இல்லாதவர்கள், இறைவன் சங்கல்பத்தின்படி
முடிவற்ற (சம்சாரம் என்ற) பிறவிக்கடலில் சிக்கித் தத்தளிக்கிறார்கள்.

4.    சிலர் இறைவனின் மகிமையைப் பாடுகிறார்கள். அதுவும்
அவர் வழங்கும் ஆற்றலுக்கு ஏற்பவே அமைகிறது; அவர் வழங்கும் செல்வங்களை அவருடைய அருளுக்குச் சாட்சியெனக் கொண்டு சிலர் பாடுகிறார்கள்; வேறு சிலர் எவராலும் அறிய முடியாதவன் இறைவன் என்று பாடுகிறார்கள்.

5.    மண்ணை உயிராக்கி, பிரகு உயிரை மறுபடியும்
மண்ணாக்குகிறார் அவரே என்று சிலர் பாடுகிறார்கள்;
படைப்பவரும் அவரே; அழிப்பவரும் அவரே; உயிரைக் கொடுப்பவரும் அவரே: பறிப்பவரும் அவரே.

6.    ஒரே சமயத்தில் நமக்கு மிகவும் அருகில் 
  இருப்பவராகவும், மிகவும் தொலைவில் இருப்பவராகவும்
  அவர் விளங்குகிறார் என்று சிலர் பாடுகிறார்கள்.
 
  அவரை வர்ணிப்பதற்கு எல்லையே இல்லை.
 
       எண்ணற்றவர்கள் அவரை வர்ணிக்க முயற்சி   செய்திருக்கிறார்கள். எனினும் அவர் வர்ணனைக்கு அப்பாற்பட்ட ஒருவராகவே விளங்குகிறார்.

இறைவனின் திருவருளைப் பெற்றவர்கள் களைப்படையக் கூடும். ஆனால் அவர் களைப்பே இல்லாதவர்,

காலம் காலமாக அவர் அருளினால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். அவருடைய சங்கல்பத்தினால்தான் உலகம் இயங்குகிறது. இருந்தாலும் யாருடைய தயவும் கவனிப்பும் தேவைப்படாதவர் அவர்.

7.    இறைவன் சக்தியம், அவருடைய புனிதச் சொல்லும் 
சத்தியமானது. அவருடைய அன்புக்கு எல்லையே கிடையாது.
8.    செல்வம் தருமாறு மனிதர்கள் இறைவனிடம்
பிரார்த்தனை செய்கிறார்கள். அவரும் அவர்கள் கேட்கும் எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கியபடியே இருக்கிறார்.

எல்லாமே அவருடையதாக இருக்கும்போது அவரது பாதகமலங்களில் நாம் என்ன காணிக்கை செலுத்த முடியும்? என்ன சொல்லி அவருடைய அன்பைப் பெறமுடியும்?

9.    விடியற்காலை நேரங்களில் ஜபம், தியானம்
ஆகியவற்றின் மூலம் இறைவனுடன் ஒன்றுபடு.

ஒழுக்கம்

1. முன் காலத்தில் பிறர் மனைவியை இச்சித்தவன் ஒருவன்தான் இருந்தான் அவனுக்காக எழுதப்பட்டது ராமாயணம்.

முன்காலத்தில் பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டவன் ஒருவன் தான் இருந்தான். அனுக்காக எழுதியது பாரதம்.

இப்பொழுது எழுத ஆரம்பித்தால் ராமாயண – மகாபாரதங்கள் மலையாகக் குவியும்.

2. ஆயிரம் வருடம் யாரையும் கடிக்காத நாகம் தலையில் மாணிக்கம் இருக்கும்.

மனிதனும் பிரம்மசரிய விரதத்தைக் காத்தால் அபாரமான ஆத்மசக்தி வளரும்.

3. உடம்பால் வேலை செய்பவனை வட மூளையால் வேலை செய்பவனுக்குத் தான் அலுப்பு அதிகம்.

நிழலில் இருப்பவனுக்குக் கஷ்டமில்லை என்று நினைக்கக் கூடாது.

3. பிறர் உங்களைப் புகழ வேண்டுமானால் நீங்கள் பிறரைப் புகழுங்கள்.
நீ பிறரைக் குறை கூறினால், பிறர் உன்னைக் குறை கூறுவார்கள்.

4. காந்தியடிகள்  37-ஆவது வயதில் இல்வாழ்க்கையில் கசப்படைந்து மக்களுக்குச் சேவை செய்யத் தலைப்பட்டார்.
நமக்கு வயது 70 ஆனாலும் கூட வாழ்க்கையில் கசப்புத் தட்டுவதில்லை; உலக ஆசைகள் விடுவதில்லை.

5. நமக்கு ஆகாத மலர்களையெல்லாம் பரமசிவன் ஏற்றுக் கொண்டார்.
ஆகவே, செல்லாத காசும் அவர் உண்டியில் போடுவோம் என்று நினைப்பது தவறு.

6. கையில் பெருவிரல் தனியே நிற்கிறது. மற்ற விரல்கள் சேர்ந்து இருக்கிறது.
அது போல் பெரிய மனிதன் எப்போதும் ஒதுங்கியே வாழ்வான்.
சில்லரைகள் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும்.

7. பாண்டவர்கள் ஐந்து பேர்; துரியோதனாதிகள் நூறு பேர்; முன் காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேர்களும், தீவயவர்கள் நூறு பேர்களும் இருந்திருக்கிறார்கள்,

இப்போது கேட்க வேண்டுமா?

8. நன்மைக்குப் பாதை போகப் போக விரியும்.
தீமைக்குப் பாதை போகப் போகப் சுருங்கும்.

9. ஆட்டுப்பாலில் பிழுக்கை விழுந்தால் பிழுக்கையை எடுத்து  எறிந்துவிட்டுப் பாலை உபயோகிக்கிறோம்.

அதுபோல் மனிதனிடம் உள்ள குற்றத்தைப் பற்றிப் பேசாமல் குணத்தைப் பற்றியே பேச வேண்டும்.

10. பொய்மையாக வாழக் கூடாது.
பொய்மை பேசக் கூடாது.

வாழ்வு சிறக்க வேண்டுமானால் பொய்யை விட்டுவட வேண்டும்.
பொய்யா விளக்கே இருளகற்றி ஒளி காட்டும்.

அறங்களுக்கெல்லாம் தலையாயது பொய்யாமை.

ஆக பொய் பேசாதே.
சத்தியமே நித்தியம்.



கபீர்தாசின் அருள்வாக்கு

உன்மையைப் போன்ற தவம் இல்லை. பொய்யைப் போன்ற பாவம் இல்லை.
யாருடைய இதயத்தில் சக்தியம் இருக்கிறதோ அந்த இதயத்தில் குரு தானே இருக்கிறார்.

கடலின் அலைகள் எவ்வளவோ மனதின் அலையும் அவ்வளவே.
 (மனம்) ஒரு நிலையில் இருக்குமானால் எளிதாகவே வைரம் (கடவுள் தன்மை) உற்பத்தியாகிவிடும்.

செல்வத்தை எல்லோரும், விரும்பி வழிபடுகிறார்கள். செல்வத்தின் தலைவனை ஒருவரும் வழிபடுவதில்லை.
கடவுளை வழிபடு. எல்லா நன்மைகளும் உனக்கு அடிமையாகிவிடும்.

தூங்கி இரவை இழந்தாகிவிட்டது.
சாப்பிட்டுப் பகலும் போயிற்று.
பிறவி விலை மதிப்பற்ற வைரமாக இருந்தது. அதை இப்படி சல்லிக்காசுக்கு மாற்றியாகிவிட்டது.

ஆண்டவனால்தான் எல்லாம் நடக்கிறது. மனிதனால் ஒன்றும் இல்லை.
அவர் கடுகிலிருந்து மலையை ஆக்குவார். மலையைக் கடுகாகவும் ஆக்குவார்.

சிரித்துச் சிரித்து யாரும் கடவுளை அடைந்ததில்லை.
கடவுளை அடைந்தவன் அழுது அழுதே அவரை அடைந்தான்.
சந்தோஷமாக இருந்தே கடவுளை அடைந்துவிடலாம் என்றிருந்தால் யார் தான் அவரை அடையாமல் இருப்பார்கள்.

வாய் பேச்சை நிறுத்தி (ஆத்ம சாதனை என்ற) செய்கையில் மனதைச் செலுத்து.
நீர் குடிக்காமல் மனிதன் தாகம் போகாது.

தண்ணீரில் போகிறவனைப் போக விடாதே. கையைப் படித்துக் கரைக்கு இழு.
சொன்னதைக் கேட்காத போதிலும் இன்னும் இரண்டு தடவைச் சொல்லிப்பார்.

குரு, கோவிந்தன், இருவரும் நிற்கிறார்கள். முதலில் யார் காலில் விழுவேன்? குருநாதன் போற்றத் தகுந்தவர்.
(முதலில் குருவைத்தான் வணங்குவேன்.)
ஏனென்றால், அவர்தானே கோவிந்தனை எனக்கு காட்டிக் கொடுத்தார்.

உன் மனம் குளிர்ந்திருந்தால் உலகத்தில் உனக்கு எதிரி ஒருவருமில்லை.
இந்தத் ‘தான்’ என்கிற கர்வத்தைவிடு. எல்லோரும் உன்னிடம் அன்பு கொள்வார்கள்.

பிள்ளைப் பருவம், இளமை, கிழத்தனம் எல்லாம் கழிந்துவிட்டது. நான்காம் பருவம் வந்துவிட்டது.
எலியைப் பூனை நோக்கியிருப்பது போல் யமன் நோக்கியிருக்கிறான்.

உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்துகொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்துகொள்வதில்லை. மனதால் யோகியானால் எளிதாகவே எல்லாவற்றையும் அடையலாம்.

ஆடலாம், பாடலாம் ( தேவாரம் – திருவாசகம் போன்ற ) பாடல்களை ஓதலாம். ஆனால் குருவிடம் பக்தி இல்லை. கபீ்ர் சொல்கிறார்: விதை இல்லாமல் வயலில் எப்படி விளைவு ஏற்படும்? ( குரு அன்பு விதை)

இறை நம்பிக்கை.

காசி ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் காசி விஸ்வ நாதன், இறைவி காசி விசாலாட்சி. ஒரு நாள் அவர்கள் இருவரும் அமர்ந்து ஆன்மிக விஷயங்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது காசி விஸ்வநாதர், “இந்த மனிதர்களை நாம் மிகவும் நம்பிக்கையுடன்தான் படைத்திருக்கிறோம். இருந்தாலும் அவர்களுக்குத் தான் போதிய நம்பிக்கை இல்லை. எதிலும் ஒர் உண்மையான நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!” என்றார்.

அதைக் கேட்டதும் ஜமன்மாதா வாகிய விசாலாட்சி, “என்ன அப்படி சொல்கிறீர்கள்? அதோ பாருங்கள்... எவ்வளவு பேர் காசியைத் தேடி வந்து கங்கையில் நீராடிக் கொண்டிருக் கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் காசியைத் தேடிக்கொண்டு இங்கே வருவார்களா?” என்று வினவினாள்.

“சரி, அதைச் சோதித்துப் பார்க்கலாம்” என்று இருவரும் முடிவு செய்தார்கள்.

உடனே ஒரு திட்டம் போட்டார்கள்.

அந்த திட்டம் இதுதான்:
      “நாம் இருவரும் பக்தர்கள் போன்று உருவத்தை மாற்றிக் கொண்டு கங்கைக் கரைக்குப் போகலாம். நான் கங்கையில் இறங்கி குளிக்கிறேன். சிறிது நேரத்தில் நீர் சுழலில் மாட்டிக்கொண்டதுபோல் நான் நடிக்கிறேன். நீ உடனே கரையிலிருந்து சத்தம் போடு... ‘என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்!’ என்று கூச்சல் போடு... அதோடு இன்னொன்றும் சொல்: ‘யாராவது ஒரு புண்ணியாத்மா என் கணவரிடம் சென்று அவரது முடியைப் பிடித்துத் தூக்க வேண்டும். அப்படி ஒரு சாபம் எங்களுக்கு இருக்கிறது. புண்ணியாத்மா... அதாவது, எந்தப் பாவமும் இல்லாத ஒருவர்தான் அவரைக் காப்பாற்ற முடியும்!
அப்படிப்பட்டவர்கள் யாராவது வெள்ளத்தில் குதித்து என் கணவரைச் சீக்கிரம் காப்பாற்றுங்கள்!’ என்று சொல்லிக் கூச்சல் போடு... பிறகு என்ன நடக்கிறது பார்க்கலாம்!’ என்றார் கடவுள்,

அவ்விதம் ஜகன்மாதாவும் ஜகத்பிதாவும் சாதாரண பக்தர்கள் உருவத்தில் கங்கைக் கரைக்கு வந்தார்கள்.

இறைவன் கங்கையில் இறங்கிகுளிக்க ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் திட்டம் போட்டது போலவே சுழலில் மாட்டிக் கொண்டவர் போல் கத்தினார்.

கரையில் இருந்த விசாலாட்சி தேவி, “ஐயோ, என் கணவரைக் காப்பாற்றுங்களேன்!” என்று அலறினாள்.

பல பேர் ஓடிவந்தார்கள்.

உடனே இறைவி, “பாவம் இல்லாத புண்ணியாத்மா ஒருவரால் தான் என் கணவர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதனால் புண்ணியாத்மா யாராவது அவரிடம் போய் அவரது முடியைப் பிடித்துத் தூக்கினால் அவரைக் காப்பாற்றிவிடலாம்!” என்று தெரிவித்தாள்.

ஜகன்மாதா இப்படி கூறியதும் எல்லோரும் திகைத்துப்போய் நின்று விட்டார்கள்.

அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் செய்த பாவமெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தது.

‘சரி, இதற்கு நாம் தகுதி இல்லை’ என்று ஒவ்வொருவரும் ஒதுங்கிப் போக ஆரம்பித்தார்கள்.

இந்தச் சமயத்தில் யாரோ ஒருவன் வேகவேகமாக அங்கே ஓடிவந்தான். ஆற்றில் குதித்தான். நீரில் மூழ்கும் நிலையில் இருந்தவரிடம் சென்றான். அவரது முடியைப் பிடித்துத் தூக்கினான். அவரைக் காப்பாற்றிக் கரையில் கொண்டுவந்து சேர்த்தான்.

அப்படிக் காப்பாற்றிய அந்த ஆளை... இவர்கள் இருவரும் தனியாக ஒரு மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

“நீ யாரப்பா?” என்று எதுவும் தெரியாதவர்கள்  போல் விசாரித்தார்கள்.
“நான் இந்த ஊர் அன்னசத்திரத்தில் வேலை செய்யும் ஒரு சமயல்காரன்” என்று அந்த ஆள் கூறினான்.

“நீ கங்கையில் குளிப்பதுண்டா?” என்று வினவினார்கள்.

“நான் இந்த ஊரில் தான் இருக்கிறேன். இருந்தாலும் தினமும் கங்கையில் குளிப்பதில்லை. எப்போதாவது ஒருநாள் அங்கே குளிப்பேன்!” என்றான் சமையல்காரன்.

“கங்கையில் மூழ்கி எழுந்தால் பாவம் தொலையும் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது அங்கே இன்றைக்கு கங்கையில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தங்களைப் புண்ணியாத் மாவாக நினைக்கவில்லை. கங்கையில் குளிக்காத நீ... உன்னைப் புண்ணியாத்மாவாக நினைத்து என்னைக் காப்பாற்றுவதாக வந்தாயே... அது எப்படி?” என்று இறைவன் கேட்டார்.

அதற்கு அந்த ஆள், “கங்கையில் குதித்தற்குப் பிறகுதானே உங்களைக் காப்பாற்றப் போகிறோம்... அப்படி குதிக்கும்போதே என் பாவமெல்லாம் போயிருக்குமே...நான் புண்ணியாத் மாவாக ஆகியிருப்பேனே...அதனால் தான் துணிந்து வந்து உங்களைக் காப்பாற்றினேன்!” என்று பதில் கூறினான்.

பிறகு அவனுக்கு இறைவனும் இறைவியும் காட்சி கொடுத்தார்களாம்.

கங்கையில் குளித்துக் கொண்டிருப் பவர்களுக்கே தங்களுடைய பாவம் போகும் என்ற நம்பிக்கை பரிபூரணமாக இல்லை! குளிக்காத ஒருவனுக்கு அந்த நம்பிக்கை இருந்தது! அதனால் தான் அவனால் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசிக்க முடிந்தது.

நாம் நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதே இந்தக் கதையின் முக்கிய கருத்து.

திங்கள், 8 ஏப்ரல், 2013

தியானத்தில் தடைகள்.

தடைகள் இல்லாத வாழ்க்கைப் பாதை எதுவும் இல்லை.

தடைகளைத் தாண்டாமல் எவரும் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியாது.

“ஒரே தாவலில் யாரும் மேதைகள் ஆனதில்லை. பிறர் அயர்ந்து தூங்கும் ஆழ்ந்த இரவுகளில் உயிரைக் கொடுத்து உழைத்தால் மட்டுமே அவர்கள் அந்த உயர்ந்த நிலையை எட்ட முடிந்தது”. என்று ஆங்கிலக் கலைஞர் லாங்ஃபெலோ கூறியது ஆன்மீக வாழ்க்கையில் முற்றிலும் பொருத்தமானது.


உலகியல் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களும் பிரச்சனைகளும் பலரை ஆன்மிக வாழ்வில் ஈடுபடச் செய்கின்றன.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் எந்தத் தடையுமில்லாமல் உயர்ந்த அனுபூதியைப் பெற்றுவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இங்கேயும்கூட பூதங்கள் போல தடைகள் எழும்போது அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள்.

ஆன்மிக வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே தடைகளைத் தாண்டிச் சென்றுதான் அதைச் சாதித்தனர். புத்தர் போன்ற பெருமக்கள் கூட பல மன மயக்கங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணரின் தந்திர சாதனைகளும் ஒருவேளை இந்த வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களை இந்திய ஆன்மிகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது.

அவை முறையே 1. ஆதிதைவிகம், 2. ஆதிபௌதிகம், 3. ஆத்யாத்மிகம் எனப்படும்.

1.    ஆதிதைவிகம்: தகாத சூழ்நிலை, திருப்தியில்லாத வேலை, எதிர்பாராத பிரச்சனைகள், மனக் கோளாறுகள் போன்ற காரணம் காணமுடியாத துன்பங்கள் போன்றவை ஆதிதைவிகம் என்பதில் அடங்கும்.
2.    ஆதிபௌதிகம்: பிற மனிதர்களோ அல்லது உயிரினங்களோ விளைவிக்கும் துன்பங்கள் ஆதிபௌதிகம் என்ற பிரிவில் அடங்கும்.
3.    ஆத்யாத்மிகம்: தனக்குத்தானே உருவாக்கிக்கொள்ளும்
துன்பங்கள்.
இந்த மூன்றுவகையான துன்பங்களில் முதல் இரண்டும் ஏறத்தாழ சாதகனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை, அதாவது அவனது வினைப்பயனால் விளைபவை.

ஆனால் தவறான மனோபாவங்களில் முதல் இரண்டும் ஏறத்தாழ சாதகனின் காட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை, அதாவது அவனது வினைப்பயனால் விளைபவை.

ஆனால் தவறான மனோபாவங்களாலும் தவறான செயல்களாலும் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆத்யாத்மிகம் ஒரு சாதகனின் கட்டுபாட்டிலேயே இருக்கிறது.

எனவே இந்த மூன்றாவது வகையை ஆத்மசாதகன் எச்சரிக்கையுடன் இருந்து தன் கட்டுப்பாட்டுக்குள் கவனமாக வைத்திருக்க வேண்டும்.

இது போன்ற அகத்தடைகள் நீங்கிவிடும்போது, புறத்தடைகள் ஆன்மீக முன்னேற்றத்தைத் தடுக்கும் வலிமையை இழந்து விடுகின்றன.

இந்த அகத்தடைகள் எவை?

இதற்குப் பதிலாக இந்தியாவின் ஒவ்வொரு சமய மரபும் தனக்கென்று ஒரு சொந்தப் பட்டியலை வைத்திருக்கிறது.

சாங்கிய காரிகை நூறு தடைகளைக் கூறுகிறது. இவை விபர்பயம் (தவறான அறிவு), அசக்தி (வலிமையின்மை), துஷ்டி (திருப்தி) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் படுகின்றன.

விபர்பயம் என்பது ஐந்து வகை. அவை அறியாமை, அகங்க்காரம், கவர்ச்சி, வெறுப்பு, வாழ்க்கையில் தீவிரப்பற்று எனப்படும். இவை மேலும் பிரிக்கப்படும்போது சாங்கியக் கருத்தின்படி விபர்பயம் அறுபத்திரண்டு வகைப்படுகிறது.

அசக்திகள் என்பவை இருபத்தெட்டு வகைப்படும். அவை எல்லாவற்றையும் பற்றி இங்கு நாம் தெரிநதுகொள்ள வேண்டியதில்லை. ஆனால் தனது பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஒவ்வொரு சாதகனும் (மனிதன்) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் பொருள் தனது பலவீனங்களையே நினைத்து நினைத்து கலங்க வேண்டுமென்பதில்லை.

உடல் பலம் கொண்டவன், மன வலிமை பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதில்லை.

ஆன்ம வலிமை என்பது சாதாரண மன வலிமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
உண்மையான ஆன்மிக அனுபவம் பெறுவதற்கு இந்த ஆன்ம வலிமை இருக்க வேண்டும். இத்தகைய ஆன்ம வலிமையற்ற வர்கள் முதலில் தங்களிடம் ஆன்ம வலிமை இல்லை என்பதை உணர வேண்டும். வெறுமனே உணர்ந்திருந்தால் மட்டும் போதாது; எல்லையற்ற வலிமையின் ஊற்றாக விளங்கும் இறைவனிடம் ஆன்ம வலிமை தந்தருளும்படி கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

துஷ்டி என்பது சிறியச் சிறிய இன்பங்களில் திருப்தி அடைந்துவிடுவது. இங்கு நாம் குறிப்பிடுவது சாதாரணப் புலனின்பங்கலை அல்ல.

ஆன்மிக சாதகன் (மனிதன்) புலனின்ப நாட்டங்கள் களைக் கடந்தவனாக இருக்க வேண்டும்.

சாங்கிய காரிகை என்பது ஒன்பது விதமான துஷ்டிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

அவற்றுள் ஒன்பது, ஆரம்ப கால ஆன்மிக முன்னேற்றத்திலும் மிக சிறிய ஆன்மிக அனுபவங்களிலும் திருப்தியடைந்து விடுதல். இதை ஆன்மிக வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகப் பலரிடம் நாம் பார்க்கலாம்.

பெரும்பாலான சாதகர்கள் ஆரம்பத்தில் சிலவருடங்கள் துடிப்புடன் கடினமான ஜபம், தியானம் போன்ற சாதனைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் சிறிது மனத்தூய்மையும், மன அமைதியும் பெற்ற உடனேயே அவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்; பிறகு அவர்களின் வேகம் தடைப் பட்டு நின்றுவிடுகிறது.

மற்றும் சிலர் வெறும் புத்தக ஞானத்துடன் நின்றுவிடுகிறார்கள்;  பல ஆன்மிக நூல்களைப் படிப்பதிலயே அவர்கள் திருப்தி காண்கிறார்கள்.

இன்னும் சிலரோ சில புற மாற்றங்களால் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்; கமண்டலம் வைத்துக் கொள்வது, காவி உடுப்பது, ஏராளமான ஆன்மிக நூல்களை வைத்துக்கொள்வது, அறையில் அழகிய பூஜை மேடை வைத்துக்கொள்வது, பிரசாதம் உட்கொள்வது போன்ற செயல்கள் பலருக்கு திருப்தி தந்துவிடுகிறது.

விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு ‘எதற்கும் ஒரு காலம் நேரம் வரவேண்டும்’ என்று தவறான நம்பிக்கையுடன் இருப்பதில் சிலர் திருப்தி பெற்று விடுகிறார்கள். உண்மைதான், ஆன்மிக முன்னேற்றம் காலத்தைப் பொறுத்துதான்; ஆன்மிக அனுபூதி என்பது எப்போது வரும், எந்த நேரத்தில் வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அதற்காக, ‘எல்லாம் நேரப்படி நடக்கும், எதற்கும் அதிஷ்டம் வேண்டும்! என்றிருப்பது கோழைத்தனம்.

(பகவான், கீதை 4.38 –இல் ‘நாளடைவில் யோகத்தில் சித்தி பெறுகிறான் – காலேனாத்மனி விந்தி’ என்று சொல்லும் போது இத்தகைய கோழைத்தனத்தைக் குறிப்பிடவில்லை.)

இது போன்ற கோழைத்தனம் வாழ்வை எதிர்நோக்காமல் தப்பி ஓடுவது மட்டுமல்ல, இதனால் ஆன்மிக  முன்னேற்றமும் வெகுவாகத் தடைப்படுகிறது.

சாங்கிய காரிகை இன்னும் ஒருவிதமான திருப்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதாவது பக்குவமடைவதற்கு முன்பாகவே, தகுதி பெறுவதற்கும் முன்பாகவே செயல் புரிவதைத் துறந்து விடுவதால் பெறும் திருப்தியே அது.

புறத்துறவையும் பலவிதமான தவங்களையும் மேற்கொள்ளும்போது எதையோ சாதித்துவிட்ட எண்ணம் சாதகனுக்கு ஏற்படுகிறது. ‘ஆன்மிக வாழ்க்கை இவ்வளவுதான், இனி எதுவும் தேவையில்லை’ என்ற தவறான முடிவுக்குச் சிலர் வந்து விடுகிறார்கள்.


(உதாரணமாக ‘ஸந்யாஸ க்ரஹமாத்ரேண நாராயணோ பவேத் – வெறுமனே சந்நியசம் பெற்றுக் கொண்டால் போதும், மனிதன் இறைவனாகிவிடுகிறான்’ – இது போன்ற எண்ணம் ஆன்மிக முன்னேற்றத்தை உடனே தடுப்பது மட்டும் அல்ல, சாதகனைக் கிழேயும் தள்ளுகிறது.)

இத்தகைய கீழான திருப்திகளும் நிறைவுகளும் உண்மையான ஆன்மதாகத்தை நீர்க்கச் செய்துவிடுகின்றன;  உண்மையான ஆன்மதாகத்தின் தரத்தை மிகவும் தாழ்த்தி விடுகின்றன; பேரானந்தத்திற்கான, உயர்ந்த நிறைவுக்கான முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகின்றன. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் இதை ஒர் எளிய உதாரணத்தின் மூலம் பின்வருமாறு விளக்குகிறார்.

‘வியாபாரிகள் கிடங்குகளில் மூட்டை மூட்டையாக நெல்லைக் குவித்து வைத்திருப்பார்கள்.  ஒவ்வொரு குவியலைச் சுற்றிலும் நெற்பொரியைத் தூவி விடுவார்கள். தானியங்களைத் தின்னவரும் எலிகள் இரவு முழுவதும் இந்தப் பொரியைத் தின்பதிலேயே திருப்தி அடைந்து தானிய மூட்டைகளின் பக்கமே போகாமல் சென்றுவிடுகின்றன; பத்துப்பங்கு பொரியை ஒரு பங்கு நெல் உண்டாக்கும் என்பதையே அவை மறந்துவிடுகின்றன.


“பெரிய தானியக் களஞ்சியங்களின் வழிக்கதவின் முன்னால் எலிகளைப் பிடிப்பதற்காகப் பொரி உருண்டை வைத்தப் பொறிகள் (கம்பியால் செய்யப்பட்ட எலி கூட்டுகள். அதற்குல் பொரி  உருண்டை) வைக்கப்பட்டிருக்கும். எலிகள் பொரி உருண்டையின் வாசனையை நுகர்ந்து களஞ்சியத்தின் அரிசையைத் தின்று களிக்கும் சுகம் அனுபவிப்பதில் ஈடுபடுவதை மறந்து. பொறியில் அகப்பட்டுச் சாகின்றன. ஆத்மாவின் விஷயமும் அதுபோலத்தான். அது தெய்விக ஆனந்தத்தின் வாசற்படியில் நிற்கிறது. அந்தத் திவ்யானந்தமோ கோடிக்கணக்கான விஷயானந்தம் என்ற உலகச் சுகங்கள் ஒன்றாகத் திரண்டன போன்றுள்ளது; என்றாலும் ஆத்மாவானது அந்தப் பேரின்பத்தை அனுபவிக்காமல் உலக விஷயங்கள் என்ற சிற்றின்பத்தில் வசப்பட்டு, மாயையாகிய வலையில் வீழ்ந்து, அதிலேயே இறந்தொழிகிறது.”

இத்தகையத் தடைகளைப் பற்றி பிற மதங்களைச் சேர்ந்த ஞானிகளும் கூறியிருக்கிறார்கள்.


ஆன்மிகச் சிந்தனைகள்.

1.    சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டடு
அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.

நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.

நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.

குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.

ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.

2.     நீ இறைவனுடைய கருனையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.

அது வெறும் வணக்கமும் வழிபாடும் மட்டுமன்று.

துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருனை செய். அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருனை செய்தால்
கடவுள் உன்னிடம் கருனை செய்வார்.
கருணையால் கருணையைப் பெறலாம்.
இதனை ஒருபொழுதும் மறவாதே.


3.    உலகத்திலே நீ இரு. ஆனால் உலகம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

குடும்பத்தில் நீ இரு. ஆனால், குடும்பம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

உலகமும் குடும்பமும் உள்ளத்தில் புகுந்தால்
நீ அழுந்திவிடுவாய்.

வண்டிமேல் நீ ஏறு; வண்டி உன்மேல் ஏறக்கூடாது.

கப்பல் கடலில் இருக்க வேண்டும், கடல்
கப்பலில் புகக்கூடாது. கடல் நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் அழிந்திவிடும்.


4.    வேறு எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத நரையை உனக்கு இறைவன் தந்தது எதன் பொருட்டு என்று சற்றுச் சிந்தித்துப் பார்; ஏனைய பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை;
மனிதனாகிய உன்னில் உறையும் உத்தமனை
அடைய நீ வந்தாய். அதை மறந்தவருக்கு ஓர்
உணர்ச்சி வரும்பொருட்டே இறைவன்
நரையைத் தந்தான்.

நரைக்கத் தொடங்கும்போதாவது உன் ஆவி
ஈடேறும் நெறியில் செல்.

5.    யாசித்து, நெய்யும் பாலும் தயரும் சேர்நத் சிறந்த அன்னதை உண்பதைவிட,  உழைத்து உண்ணும் தண்ணீரும் சோரும் சிறந்தது.

வீரமும் புகழுமில்லாமல் மங்கி நெடுங்காலம் இருப்பதைவிட, வீரமும் புகழும்  பெற்றுச்
சிறிது காலம் வாழ்வது சிறந்தது.

உமிக குவியல் நெடுநேரம் காந்திக்
கருகவதைவிட, தைலமுள்ள மரம்
ஜொலித்துச் சிறிது நேரம் எரிவது சிறந்தது.

6.    புலன்களை வென்றவனே வீரன்.
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி.

துன்பங்களைப் பொறுப்பவனே தவசி.

விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான்.

அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன்.

கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.


7.    அழுக்கு மூன்று வகையாகும்..
i)    மன அழுக்கு. அவை:- பொறாமை, ஆசை, கோபம்,
பகை என்பன.
இந்த மன அழுக்கைத் ‘தியானம்’ என்ற நீரால் கழுவுக.
ii).    வாயழுக்கு, அவை:- பொய், புறங்கூறல், தீச்சொல்
என்பன.
இந்த வாயழுக்கைத் ‘துதி’ என்னும் நீரால் கழுவுக.
iii).    மெய்யழுக்கு. அவை:- கொலை, புலை, பிறன்மனை
நயத்தல், களவு முதலியன.
இந்த மெய்யழுக்கை ‘அர்ச்சனை’ என்னும் நீரால் கழுவுக.

8.    நாவுக்கு அடிமையாகாதே! ‘நல்லுணவு எங்கே? எங்கே?
என்று தேடி ஏங்காதே. இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடை.

நாவுக்கு அடிமையானால் உனது நல் குறையும்.

மீன் சதா உணவாசையினால் ஒழியாமல் தண்ணீர்ல்,
உலாவுகிறது, ஒருசமயம் உணவாசையால் தூண்டிலில் பட்டு இறந்துவிடுகிறது.

9.    பாம்பு, தேள், நட்டுவாக்கிலி முதலிய பெருந் துன்பத்தைச் 
செய்யும் உயிர்களைப் போலவும்.
பெருச்சாளி, எலி, பூனை, நாய் முதலிய துன்பத்தைச் செய்யும் உயிர்களைப் போலவும்,
கொசு, மூட்டை பூச்சி, உணி முதலிய சிறு துண்பத்தைச்
செய்யும் உயிர்களைப் போலும் நீ இருக்காதே.

அனில் என்ற உயிரை நோக்கு; அது ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்கிறது சேதுபந்தனத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது. அதுபோல் வாழ்தல் வேண்டும்.

10.     பிறர் உன்னை வைவார்களாயின் அந்த வன்சொற்களை இன் சொற்களாக கருது.
நீ எக்காரணத்தைக் கொண்டும் எப்போதும் எவ்விடத்தும் பிறரை வன்சொல் கூறி வையாதே.
கிடைத்தது கூழாயினும் அதனை
நெய்யன்னமாகக் கருதி உணவு செய்.
பழம் பாயேயானாலும் பஞ்சனையாகக் கருதிப் படு.
கசப்புப் பெருளாயினும் அதனைக் கற்கண்டாகக் கருதி
உட்கொள். அதனால் மெய்ப்பதம் காண்பாய்.

11.    இப்போது நீ செய்கிற விவசாயத்தின் பயனை அடுத்த
ஆண்டில் நீ அனுபவிப்பாய்.
நன்கு உழைத்துப் பாடுபடுவாயானால் நல்ல பயன் விளையும். அடுத்த ஆண்டு உனக்கு நலமாக இருக்கும்.
சோம்பலாக இருந்து பாடுபடாமல் பொழுது போக்குவாயானால் அடுத்த ஆண்டில்  உனக்கு நன்மை இராது.

அதுபோல் இந்தப் பிறப்பில் நீ செய்யும்
நன்மைகளை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.
நன்மை செய்யாமல் சோம்பியிருந்து, தீங்கு புரிவாயானால், மறுபிறப்பில் உனது வாழ்வு சிறப்படையாது தாழ்வு அடையும்.

12.    பிறவியைத் தருவது பற்றும் அவாவுமாகும் என்று அறி. 

பற்று என்பது:- உனது பொருளில் உள்ளம் வைப்பது.
அவா (ஆசை) என்பது:- பிறர் பொருளில் ஆசை வைத்திருப்பதால் பெருங்கேடு வரும்.
முதலில் ஆசையைத் தொலைத்துவிடு; பின்பு
பற்றையும் ஒழித்துவிடு.

‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’

13.    பணிவு என்ற பண்பு உன் வாழ்க்கையின்
உயிர் நாடி. பணிவு இன்றி வாழ்பவனுடைய
வாழ்க்கைத் திறம் நிச்சயமாக
உயர்ச்சியடையாது.

14.    இன்பமும் துன்பமும் உனது
மனதிலிருந்து உண்டாகின்றன; மனமே
பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகிறது.
தீய மனம் நரகத்தைத் தருகிறது. நன்மனம்
பரகதியைத் தருகிறது.
மனத்தழுக்கு அற்றவரே பெரியார்.
மனத்துக்கண் மாசில்லாமல் இருந்தால் எல்லா
அறங்களும் உண்டாகும். ஆதலினால் உன் மனம்
பளிங்குபோல் இருக்கட்டும்.

15.    ஒரு மனிதனை வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு
நல்லவனென்றோ! தீயவனென்றோ! உறுதி செய்துவிடாதே, உள்ளத்தின் பண்பைக் கண்டு முடிவு செய்.

பலாப்பழம் முள்ளு முள்ளாக மேலே தோற்றமளிக்கும்.
உள்ளுக்குள் சுவையுள்ள சுளைகள் பல உண்டு. வீணை கோணல் – ஆனால் இனிய நாதமுண்டு.

எப்படிப்பழம் மேலே பளபளவென்றிருக்கும்; தொட்டாலே கசக்கும். நாவற்பழம் கருமை; ஆனால் இனிக்கும். பாம்புக்குட்டி பளபள வென்றிருக்கும்; கொடிய விஷத்தைத் தரும். அம்பு நேராக இருக்கும்; உயிரை வாங்கும்.

16.    உன் இனத்துடன் நீ ஒற்றுமையாக இரு. அப்போதுதான்
உனக்கு உயர்வும் மதிப்பும் அழகும் உண்டாகும்.
உன் இனத்தை விட்டு நீ பிரிந்துவிட்டால் நீ எல்லோராலும் வெறுக்கப்படுவாய்.
தலையிலே மயிர் இருக்கும்போது அது
எவ்வளவு அழகாக உள்ளது? இருண்டு, சுருண்டு, நெய்த்து மிக அழகாக அமைந்து மதிப்பும் அழகும் பெறுகிறது. ஆனால் தன் இனத்தை விட்டு ஒரு மயிர் தனித்து வேறுபட்டு வந்துவிடுமானால் அது இகழ்வும் அருவருப்பும் அடைகிறது. இதனை நீ எண்ணிப் பார்த்து ஒற்றுமையாக இரு.

17.    உனது மனைவி மக்களுக்கு நிரம்ப வேண்டும் என்று,
பொய்யும் வஞ்சனையும் செய்து பொருளைத் தேடாதே. அப்படித் தேடுவதனால், நீ தேடிய பொருள் மனைவி மக்களையடைந்து அவர்களுக்கு தீமையை விளைவிக்கிறது. அதனால் வரும் பாவ மூட்டை உன் உயிருடன் தொடர்ந்து வருகிறது.

உடம்புக்குச் சில ஆண்டுகள் தொடர்புடைய மனைவி மக்களுக்காகத் தீய வழியில் பொருள் ஈட்டி வைத்துவிட்டு, நீ கணக்கற்ற பாவத்தைச் சுமந்துகொண்டு போவது எத்துனைப் பெரிய மடமை? எண்ணிப் பார். அறநெறியில் பொருளை ஈட்டு.