சீடன் ஒருவன் தன் குருவைக் கண்டு வணங்குவதற்காகக் காணிக்கைப் பொருளுடன் சென்றுகொண்டிருந்தான்.
அந்தக் குருவின் மீது ஏற்கனவே பொறாமைக் கொண்டிருந்த யோகி ஒருவர் அந்தச் சீடனை வழிமறித்தார்.
அவனைப் பார்த்து, “உன் குருவிற்கு எதுவுமே தெரியாது. அவர் ஒரு முட்டாள். நீ அவரைவிடப் பெரிய முட்டாள். அதனால்தான் நீ அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளாய். உன் குருவால் ஏதேனும் அற்புதம் செய்து காட்ட முடியுமா? என்னைப் போல் அவரால் நீரில் நடக்க முடியுமா? வானத்தில் பறக்க முடியுமா? அல்லது பூமியில்தான் புதைந்து கிடக்க முடியுமா? அவரால் எதுவுமே முடியாது. அப்படிப்பட்ட குருவிடம் சென்று ஏன் உன் நேரத்தை வீணாக்குகிறாய்?” என்று தற்பெருமையுடன் கேட்டார்.
அதற்கு அந்தச் சீடன், “நான் ஏன் அவரைக் குருவாகக் கொண்டிருக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன் தெரியுமா? அவர் எப்பொழுதும் பிறரைக் குறை சொல்லமாட்டார், கோபப்படமாட்டார். இவற்றைத்தான் நான் அற்புதங்களில் எல்லாம் மிகச் சிறந்த அற்புதம் என்று நினைக்கிறேன்” என்று பதில் தந்தான். இதைக் கேட்ட யோகி தலைக்கவிழ்ந்தபடி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
மனிதன் பல விலங்குகள் செய்யும் சாகசங்களையும், பறவைகள் செய்யும் வித்தைகளையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அவ்வாறு அது அவசியம் என்றால் விலங்குகளுக்கு என்று இருக்கின்ற சில வெளித்தோற்ற சிறப்பியல்புகளை கடவுள் மனிதனுக்கும் கொடுத்திருப்பார். மனிதன் மனிதத் தன்மையோடு மனிதனாக வாழவேண்டும் என்பதே இயற்கையின் நீதி. இதை மீறினால் இயற்கையின் அழிவுக்கு மனிதனே காரணமாகிவிடுகிறான்.
ஆனால் ஒரு உண்மை இயற்கையின் எழிலை மனிதன்தான் சீற்குலைக்கின்றான். அவனால் செய்யப்படும் வினைகளை மாற்றங்களை முழுமையாக மறுசுயற்சி செய்யமுடியவில்லை தினறுகின்றான்.
சாப்பிட்ட பொருள் முழுமையாக ஜீரனம் அடையாவிட்டால் வயிற்று வலி தான் வரும். அது போன்று என்ன செயல் இயறக்கைக்கு ஒவ்வாமையைக இல்லாமல் இருக்கின்றதோ அதையே செய்து மற்றவைகளை செய்யாமல் அமைதியான போக்கில் உலகை வழி நடத்த வேண்டும், என்பதற்காகவே நமது முன்னேற்கள் ஆம்மிக வழியில் பல நுனுக்களை நமக்கு முன்கூட்டியே சொல்லியிருக்கின்றனர் ஆனால் அதன் அர்த்தங்கள் ஆழமானவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக